சென்னையில் 14ம் தேதி பாரம்பர்ய மருத்துவ பயிற்சி…
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் பாரம்பரிய மருத்துவ பயிற்சி!
அஞ்சறைப்பெட்டியில் அரிய மருத்துவம், வீட்டைச் சுற்றி வளரும் எளிய மூலிகைகளின் மருத்துவ குணம், தலைவலி, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பல நோய்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவை பற்றி மருத்துவ பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படும்.
வலி நீக்கு எண்ணெய் மற்றும் பல்வேறு மருந்து செய்முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். தமிழ்க்குமரன் என்ற மரிய பெல்சின் (மூலிகை ஆராய்ச்சியாளர்) எனும் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கிறார். பயிற்சியில் பங்கேற்க முன் பதிவு அவசியம் முன்பதிவு செய்ய 9551486617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். பயிற்சியின் போது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி நடைபெறும் நாள்; 14.05.2022,( சனிக்கிழமை)
பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
பயிற்சி நடைபெறும் இடம்: த கிராண்ட் ஹால் (எவரெஸ்ட் பேக்கரி அருகில்) முதல் பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ மாத்தூர், சென்னை
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtChennai
Comments