தொப்பை குறைய; மூட்டுவலி நீங்க, தூக்கம் வர மூன்று விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
தானியங்கள் அல்லது பயறு வகைகளை அப்படியே சாப்பிடாமல் அவற்றை முளைகட்டி சாப்பிடுவதன்மூலம் நிறைய சத்துகளைப் பெற முடியும். குறிப்பாக உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து மிக எளிதாகவும் அதிக அளவிலும் கிடைக்கும். இது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது மட்டுமல்ல எளிதாக செரிமானமாகி உடனடி பலன் தரக்கூடியவை.
தொப்பை குறைய முளைகட்டிய வெந்தயம்
வாழ்நாளை நீட்டிக்கும் தன்மை இந்த முளைகட்டிய தானியங்களில் உள்ளது. அந்தவகையில், முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கும். வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
Must Watch: நெஞ்சு சளிக்கு தீர்வு தரும் இந்த ஒரு இலை போதும்...
கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக்கொள்ளும் என்பதால் தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.
மூட்டு வலி தீர முளைகட்டிய கொள்ளு
கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது அதிக உடல்சூடு, கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரி செய்ய உதவும்.
நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கக்கூடியது என்பதால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.
தூக்கம் தரும் சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை ஒரு அற்புத மருந்து என்று சொன்னால் அது மிகையாகாது. சோற்றுக்கற்றாழையின் மடலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதையை தண்ணீரில் நன்றாக கழுவி பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து 4 சுண்டைக்காய் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டால் உடல் பலவீனம் போக்குவதோடு ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தும்.
சோற்றுக்கற்றாழையை காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்து எடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பல்வேறு காரணங்களால் வரக்கூடிய அனைத்து வயிற்று வலிகளும் விலகிவிடும்.
சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.
முன்னெச்சரிக்கை; இந்த கட்டுரை உடல் நலத்துக்கான உதவிக்குறிப்புகள் மட்டுமே. மற்றபடி ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப தீர்வுகளும் மாறுபடும். எனவே கட்டுரையின் எழுத்தாளரிடம் மேல் விவரங்களைப் பெற்று பயன்பெறவும்
- எம்.மரிய பெல்சின் - 9551486617
#mullaikattiyaVenthyam #mullaikatiyakollu #sodrukatralai . #Pattyvaithiyam
Comments