உடல் எடையை குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் பாதாம் பருப்பு அவசியம்….


உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதுதவிர கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்று வந்தாலும் கூட பல பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்று சொல்கின்றனர். எனவே, உடல் நலத்தில் முன் எப்போதையும் விட அதிக அக்கறை காட்ட வேண்டிய தருமணம் நமக்கு உள்ளது. 

ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் நம் உடலுக்கு அதிக சத்துக்களை தரக்கூடிய பாதாம் பருப்பு குறித்து இப்போது பார்க்கலாம். பாதம் பருப்பில் 15 வகையான நுண்ணூட்டசத்துகள் உள்ளன .

Must Read: விரதத்தின் போது நமது உடலின் ஆற்றலை தக்க வைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

பாதாம் பருப்பு சாப்பிடுவது குறிப்பாக இதயநோய் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தரக் கூடியதாகும். தினமும் 30 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடும்போது, இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 

நம் உடலில் உருவாகும் கெட்ட கொழுப்புகள் இதயத்துக்கு பாதகம் விளைவிப்பவை. ஆனால், பாதாம் பருப்பு போன்ற சில கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் திறன் கொண்டவை. ஆரோக்கியத்துக்கு நல்லது.

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற பாதாம் பருப்பு    

பாதாம் பருப்பு சாப்பிடுவதில் இன்னொரு நன்மை இருக்கிறது. ஆம், உங்கள் உடலில் தோல் விரைவில் முதிர்ச்சியடைவதை தடுக்கிறது. சருமத்தை பாதுகாக்க கண்ட, கண்ட களிம்புகளை பூசுவதை விடுத்து, தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் சருமம் மிளிர்வதை பாதாம் பருப்பு உறுதி செய்யும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

வயதுக்கேற்ற , உயரத்துக்கு ஏற்ற உடல் எடை கொண்டிருக்க வேண்டும். அதீத உடல் எடை என்பது பல்வேறு ஆபத்துகளை கொண்டு வரும். பாதாம் பருப்பு உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவது குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்கும் இடுப்பு சுற்றளவை குறைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

-ரமணி 

#BadamBenefits  #BadamPreventHeartDeases   #BadamForWeightLoss

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments