தூக்கமின்மை பிரச்னையும், அதற்கான தீர்வும்
தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம் நமது மனதுதான். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், தூக்கம் என்பது தானாக வரும். சில நேரம் நாம் உண்ணும் உணவு கூட தூக்கமின்மைக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் அதிகமாக உண்பதால் இரவு தூக்கம் கெடும். அதே நேரத்தில் சத்து நிறந்த பச்சை காய்கறிகள் கொண்ட உணவுகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை உணவுகள், பழங்கள், முழு தானியங்கள், கடல் உணவுகள், கோழி, தயிர், மூலிகை வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் தூக்கம் அதிகரிக்கும்.
Must Read: ‘நலமும் நளபாகமும்…’மரு.விக்ரம்குமாரின் தொடர்…
இவை எல்லாவற்றையும் விடவும் சீரான உணவுப்பழக்கம்,சீரான உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான மனநிலை ஆகியவை தூக்கத்தை இடையூறு செய்யாமல் இருக்கும்.
நோய் நீக்கும் மூலிகை படுக்கைகள்
தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப்பூக்களை பறித்து வந்து தலையணையின்மீது பரப்பி வைத்து மெல்லிய துணியால் அதை மூடி வைத்து தலை சாய்த்து வந்தால் நிச்சயம் தூக்கம் வரும். மனநோயாளிகளும் இதையே செய்து வந்தால் காலப்போக்கில் நிவாரணம் கிடைக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு காய்ச்சல், ஜன்னி, தலைவலி, சைனஸ் கோளாறுகள் வராமல் இருக்கவும், இதே பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் அருமையான மருந்து ஒன்று இருக்கிறது.

அதாவது நொச்சி இலை, மா இலை, வேப்பிலை போன்றவற்றை கலந்து தலையணைபோல் தயாரித்து பகல் நேரங்களில் அதன்மீது தலைசாய்த்து வந்தால் மேலே சொன்ன பிரச்சினைகள் விலகும். கழுத்து பிடிப்பு வந்தால் புழுங்கல் அரிசியை தலையணைபோல் செய்து அதன்மீது தலைசாய்த்து உறங்கி வந்தால் பிடிப்பு விலகும்.
சைனஸ், மூக்கடைப்பு, தலைவலி, கழுத்து பிடரியில் ஏற்படும் வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும்போது தலையணையில் நொச்சி இலைகளை வைத்து தூங்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த இலைகளை மாற்ற வேண்டும். இதேபோல் இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதுதீரும்வரை வெந்நீரில் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
Must Read: நல்ல தூக்கத்திற்கும், எலும்புகளை உறுதியாக்கவும் தேன் முருங்கை பிசின்
இதேபோல் மூலத்தால் அவதிப்படுபவர்கள் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தின் தோல்களால் உட்காரும் அளவுக்கு ஒரு படுக்கை (தலையணை போன்று) தயாரிக்க வேண்டும். உட்காரும்போது இருக்கையில் அதாவது மூலம் உள்ள இடத்தில் படுமாறு பயன்படுத்தி வந்தால் காலப்போக்கில் மூலத்தின் தொல்லை விலகும்.
- எம்.மரிய பெல்சின் (9551486617)
#InsomniaProblem #SleepingIssue #NochiLeafForSleeping

Comments
View More