சொமோட்டா செயலி சர்வர் டவுண் ஆனதால் வாடிக்கையாளர்கள் காட்டம்…


இந்தியாவில் பெருநகரங்களில் உணவு விநியோகம் மூலமே உணவு விடுதிகளின் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பிரபலமான ரெஸ்டாரெண்ட்களுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்கள் சொமோட்டோ மூலமாக ஆர்டர் செய்து உணவைப் பெற்று உண்கின்றனர். இந்த நிலையில் கடந்த 24 ம் தேதியன்று பல நகரங்களில் சொமோட்டோ செயலி டவுண் ஆக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய முடியவில்லை. 

சர்வர் செயலிழந்தது: 

ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய முடியாமல் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முழுவதும் பல நகரங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நேரத்தில் சொமோட்டோ பொதுவாக செயலிழந்துள்ளது.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

"நாங்கள் தற்போது ஆன்லைனில் ஆர்டர்களை ஏற்கவில்லை. நாங்கள் விரைவில் திரும்பி வருவோம். ” என்ற வார்த்தைகள் சொமோட்டோ செயலியில் காணப்பட்டன. டெல்லியில் 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், போக்குவரத்து நெரிசல் காரணமாக பலர் சொமோட்டோ  வாயிலாக ஆர்டர் செய்ய முயற்சித்தனர். ஆர்டர் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் விரக்தி அதிகமாக இருந்தது.  இருப்பினும், சேவைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை.

சொமோட்டோ சேவைகள் பாதிப்பு

டெல்லியில் கனமழை காரணமாக, உணவு விநியோக தளமான சொமோட்டோ உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் சேவைகளில் தாக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. "சேவை செய்ய  முடிந்தவரை முயற்சி செய்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய, மழைக்கு இடையிலும் துணிச்சலாக சேவை செய்யும் குழுவினருடன் அனுதாபத்துடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் டுடேவிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் சொமோட்டோ சேவைகளில் இருந்து விலகுவது  குறித்து தங்கள் எண்ணங்களை ட்விட்டரில் வெளிப்படுத்தினர். சில பதிவுகள் கிண்டலாகவும், சில வெறுமனே ஏமாற்றமாகவும் இருந்தன.

-ரமணி 

#Zomato #ZomatoDelivery #ZomatoSeverDown #ZomatoSeviceAffect


Comments


View More

Leave a Comments