
ஈரோடு மாவட்டத்தில் செஞ்சோலை பயிற்சி பண்ணை தொடக்கம்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
உணவுத்திருவிழாக்கள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
செஞ்சோலை பயிற்சி பண்ணை தொடக்கம்
சூலூர் செஞ்சோலை பயிற்சி மையத்தில் பாரம்பர்ய உணவு திண்பண்டங்கள் பயிற்சி, இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் செஞ்சோலையின் புதியதோர் பயிற்சிப் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.
சூலூர்.செஞ்சோலை பண்ணையை மையமாகக் கொண்டு, கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை வழி வேளாண்மை & வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் & நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.
Must Read: இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா?
இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் நடத்தக்கோரி நண்பர்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மலையடிவாரத்தில், உள்ள நண்பர் அருள்ஒளி அவர்களின் 2.5 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.
நண்பர் அருள்ஒளி அவர்கள் பல ஆண்டுகளாக வானகத்துடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். செஞ்சோலையின் செயல்பாடுகளுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தனது நிலத்தை மாதிரி பண்ணையாகவும் , வாழ்வில் கற்றல் மையமாகவும் வடிவமைக்க மிகுந்த ஆர்வமாக உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நாம் கூடி வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இந்நிலம் அமையும்.
Must Read: துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…
பண்ணை வடிவமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. உழவு, காய்கறிகளுக்கான பாத்தி அமைத்தல், கால்நடை தீவனம் பயிரிடுதல் போன்ற பணிகளை தொடங்கி விட்டோம்.களப்பணி, பண்ணை வடிவமைப்பு, நிகழ்வு & பயிற்சி ஒருங்கிணைப்பு பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
தொடர்புக்கு; செந்தில் குமரன் 95666 65654, சு.அருள்ஒளி 99765 37443 செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை,நஞ்சமடை குட்டை கிராமம்,அந்தியூர் ஈரோடு மாவட்டம்.
(முகப்புபடம்; நன்றி; வானகம் பயிற்சி மையம்)
#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtErode
Comments