உடலில் நீர்ச்சத்தை வறண்டு போகச்செய்யாதீர்கள்


நமது உடலில் தண்ணீர் சத்து நிலைத்திருப்பதால்தான் நமது செரிமான உறுப்புகள் இயல்பாக வேலை செய்கின்றன. நீர் சத்து போதுமான அளவு இருப்பதால்தான் வெயில் காலத்தில் தெருக்களில் நம்மால் நடமாட முடிகிறது. நீர் சத்து குறித்து போனால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். உடலில் நீரிழப்பு நேராமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம். உடலில் தேவையான அளவு நீர்ச் சத்து இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் ஆற்றலுடன் திகழ முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நல்ல நீரேற்றம் இருக்க வேண்டியது அவசியம். 

Must Read: கல்லீரலை காக்கும் இந்த மூன்று உணவுகள் மிகவும் முக்கியம்…

நீர்ச் சத்து என்பது நமது உடலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. இப்போது சுத்தமான ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.  

 

உடலில் நீரிழப்பை தடுக்க தண்ணீர் குடிப்பது அவசியம்

பாட்டிலில் அடைக்கப்படக் குடிநீரைக் குடிக்கலாம் என்றாலும், இயற்கை நமக்குக் கொடையாக அளிக்கும் தண்ணீர் சேமிக்கப்படும் அணைகள் அல்லது ஏரிகளிலிருந்து அரசாங்கங்கள் பைப்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரே ஆரோக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திக் கூறுகிறது.  இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரே விலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானதுமாகும். நமது வீட்டின் குழாயில் வரும் குடிநீருக்குப் பதில் நெகிழி பாட்டிலில் அடைக்கப்பட்ட அதில் இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை நல்ல தாகத்தின் போது குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் குடிநீர் எல்லாவற்றிலுமே ஏதோ ஒரு வேதிப்பொருள் கலந்திருக்கிறது. எனவே, நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பைப் மூலம் வரும் இயற்கை நமக்கு அளித்த குடிநீரை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் குடிக்க வேண்டும்.

-ரமணி 

#Dehidration , #DehidrationEffects , #HowToProtectFromDehidration 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments