செஞ்சோலை நடத்தும் ஞாயிறு கீரை சந்தை


கோவை மாவட்டம், சூலூரில் செஞ்சோலை நடத்தும் காய்கறி & கீரைகளுக்கான வாரசந்தை இரண்டுவாரங்கள் (ஆகஸ்டு 21 & 28) சிறப்பாக நடைபெற்றது.  தொடர்ந்து எல்லா-வாரங்களிலும் ஞாயிறு மாலை 03.00 முதல் 06.00 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. .

மாதத்தின் 2-வது ஞாயிறு மட்டும் (காலை 09.30 முதல் 01.30 வரை) காய்கறி, பழங்கள் மதிப்புகூட்டு பொருட்கள், மரபு தின்பண்டங்கள்,  தேன், சக்கரை, எண்ணெய் வகைகள், ஆடைகள் , கலைப்பொருட்கள் போன்றவை கிடைக்கும்.

Must Read: நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுமுறை

செஞ்சோலை ஒருங்கிணைக்கும்  வார சந்தை & மாத சந்தை-களுக்கு வந்து நமது இயற்கைவழி வழி உழவர்களுக்குத் துணைநிற்போம். நஞ்சில்லா நலவாழ்வு வாழ்வோம். 

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி

தொடர்புக்கு; செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பயிற்சிப் பண்ணை,சூலூர்,கோவை மற்றும் அந்தியூர்,ஈரோடு. மொபைல் எண்கள்; 9566665654 , 9600873444 

#SundayVegitableMarket   #SundayMarketATKovai  


Comments


View More

Leave a Comments