இயற்கைசார்ந்த வாழ்வியலுக்கான பயிற்சி முகாம் அறிவிப்புகள்


நாள்தோறும் அவசரகதியில் இயங்கும் நம்மை சுற்றிய உலகில் நாமும் இயந்திரதனமாக மாறிவிட்டோம். இந்த வாழ்க்கை முறைதான் நமக்கு பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த நோய்களை நமக்கு கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் தேவையான இயற்கை வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் குறித்த அறிவிப்புகள் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும். 

இயற்கை வாழ்வியல் முகாம் 

திண்டுக்கல் மாவட்டம்  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியின் அழகிய சூழலில் அமைந்துள்ள களரி காட்டுப்பள்ளியில் மூன்று நாள்(பிப்ரவரி 24 – 26, 2023)  இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 

நமது அன்றாடச் சூழலின் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு இயற்கையோடு நெருங்கிய உரையாடலையும் வாழ்வியலையும் இந்த முகாம் வழி பெறலாம். அனைத்து வயதினருக்கும் பொருத்தமான இந்த முகாமில் கலந்து கொள்வதன் மூலம் இயற்கையோடு இணைந்து வாழும் அழகிய வாழ்வியலை அனுபவிக்கலாம்.

Must Read: மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பூ மால்ட்

இம்முகாமில் பழங்குடிகளின் சூழல் நேய வாழ்க்கை முறை, தமிழர்களின் தற்சார்பு வாழ்வியல், மருத்துவம், உணவுப் பழக்கவழக்கம் என பல்வேறு பயனுள்ள பயிற்சிகளைப் பெறலாம். வர்மம், உடல் நலம், யோகம், மருத்துவம், நல் உணவு, கல்வி, சூழலியல் பார்வை என பல்வேறு சிந்தனைக்கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். 

களரி காட்டுப்பள்ளி பயிற்சி

இந்த முகாம் நிச்சயம் மன அழுத்தம் நிறைந்த நமது வாழ்வியலில் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். மேற்கண்ட பயிற்சிகளில் நல் அனுபவம் கொண்ட வல்லுநர்கள் நம்மோடு இம்முகாமில் கலந்து கொள்கின்றனர்.

முகாமில் பங்குபெறுபவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதி வழங்கப்படும். முன்பதிவுக்கு: https://kalariweb.in/events/nature-lifestyle-camp-2023/ மேலும் தகவல்களுக்கு: 9597557794 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

நமக்குள் ஒரு மருத்துவர் பயிற்சி

அகவெளி வாழ்வியல் நடுவம் வழங்கும் நமக்குள் ஒரு மருத்துவர் எனும் 4 நாள் அக்குபங்சர்  பயிற்சி வகுப்பு. ஏப்ரல் 29 & 30 சனி, ஞாயிறு மற்றும் மே  06 & 07  சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல்  மாலை 4:30 வரை  நடைபெற உள்ளது. 

நமக்குள் ஒரு மருத்துவர் பயிற்சி

பயிற்சியின்போது போது, கையேடு, சான்றிதழ், தேனீர், மதிய உணவு வழங்கப்படும். சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில் அக்கு தெரபிஸ்ட்கள்:கோ. விஜயலட்சுமி  9600860175, கோ. இராஜலட்சுமி   9159221618, ம.  திருஞானம்  7358824800 ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். 

முகப்பு படம்; களரி காட்டுப்பள்ளியில் ஏற்கனவே நடைபெற்ற ஒரு முகாமின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.           

TAGS: வர்மம் | யோகம் | மருத்துவம் | உணவு | கல்வி |  தற்சார்பு | பழங்குடி வாழ்வியல் | ஆற்றங்கரை நடைபயணம் | உரையாடல்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments