மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பூ மால்ட்


நிலத்தோடு வெட்டி விடப்படும் வாழை பூ இன்னைக்கு எங்களுக்கு மாதம் 300 பூவுக்கும் மேல மால்ட் தயாரிக்கவே தேவைபடுது. மூன்று மாதத்திற்கு முன்பு ஆரம்பித்தது என்னவோ வாழை தண்டில் மால்ட் தயாரிக்கத்தான்..

ஆனா அதை மால்ட்  மாதிரி தயாரிக்க முடியல.சரி நம்மிடமே வாழை பூ தான் நிறையா இருக்கேனு யோசிச்ச போது உதித்ததுதான் தேன்வாழை பூ மால்ட்..வாழை பூவாக அனுப்பினால் கூரியர்ல்ல போய் சேருவதற்கு முன்பே சேதமாகிடும்.ஆனா இப்படி நாட்டு சரக்கரை கலந்து மால்ட்டாக செய்யும் போது ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்னு சோதனை செய்து பார்த்து தெரிந்துகொண்டோம்.

Must Read: உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?

வீட்டில் மனைவி பாலோடு 2 ஸ்பூன் மால்ட் கலந்து குடிச்சாங்க. வேலைக்கு வருகிறவங்க அப்பப்ப வாயில் போட்டு சாப்பிட்டாங்க அடுத்த இரண்டாவது மாதமே இவர்களுக்கு இருந்த மாதவிடாய் பிரச்சனை தீர்ந்ததாக சொல்லிட்டாங்க..

இந்த மாதிரி பிரச்சனை உள்ள பெண்கள்தான் அதிகம்னு எங்க வீட்லையே சொன்னத வச்சு அஞ்சு மாதத்துக்கு முன்பே வாழை பூ மால்ட் தயாரிச்சு அனுப்ப ஆரம்பிச்சோம்.மாதம் நான்கு கிலோ போன மால்ட் இப்போ மாதம் பதினைந்து கிலோ போக ஆரம்பித்தது.வாழை பூவாக விற்றால் இருபது ரூபாய்க்குதான் போகும் என்பதை விட அதை நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்த்துவது ரொம்ப சிரமம்னு மால்ட் வடிவில் கொண்டு வந்தோம்.ஆனா நாங்க மதிப்புக்கூட்டிய மற்ற விளைபொருளை விட மால்ட் அதிகமா போக ஆரம்பித்தது. ஆனா அதோட பலனை யாருமே சொல்ல முன்வரல.

Must Read: பழங்களை அதன் சாதக பாதகங்கள் அறிந்து உண்ண வேண்டியது முக்கியம்

பெங்களூர் இல்லத்தரசியும், கோவையில் பணிபுரிகிற ஒரு சகோதரியும்,நான் ஆபிஸ்க்கு போகும் போது வழக்கமா நொறுக்குத்தீனிதான் கொண்டு போவேன், ஆனா கடந்த மூனு மாதமா உங்களோட வாழைபூ மால்ட்டை தினசரி கொஞ்சம் பொட்டலமா கட்டி எடுத்துட்டு போய்  கணினி முன்பு உட்காந்து வேலை பார்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமா வாயில் போட்டு அசைபோட்டுக்குவேன்,துவர்ப்பு சுவை கலந்து இனிப்பா இருந்தது, ஆனா இரண்டே மாதத்தில் பல வருடமா எனக்கு இருந்த மாதவிடாய்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது அண்ணானு செய்தி அனுப்பினாங்க.

இருபது ரூபாய்க்கும் போகும் வாழை பூவை மதிப்புக்கூட்டி 50 ரூபாய்க்கு கிடைக்கும் போது கிடைத்த சந்தோசத்தைவிட இவர்களின் ஊக்கமான வார்த்தைகள் மேலும் எங்களுக்கு உந்துதலை கொடுக்குதுங்க.

வாழை பூ மால்ட் தயாரிக்கும் வீடியோ காண https://youtu.be/gr4MNFyktzA

திருமூர்த்தி

#BananaFlowerMalt  #BenefitofBananaFlower #mensesissuecure


Comments


View More

Leave a Comments