பூசணி அல்வா செய்வது எப்படி?


கோவை மாவட்டம் சூலூர் செஞ்சோலையில் இப்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பூசணி அறுவடை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூசணியில் சுவையான அல்வா செய்யப்பட்டது. இது போன்று சுவையான பூசணி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

பூசணியை  எடுத்துக் கொண்டு முதலில் அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட வேண்டும். பின்னர் பூசணியை தூள், தூளாக துருவி எடுத்து கொள்ள வேண்டும்.  

Also Read:நின்று கொண்டே உணவு உண்பது நல்லதா?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முழுவதும் வெந்த பிறகு 3 க்கு 1 பங்கு நாட்டுசர்க்கரை ( சர்க்கரை-யின் இனிப்பு தன்மையை பொறுத்து அளவு) சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

சுவையான பூசணி அல்வா செய்வது எப்படி?முன் கூட்டியே நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனையும் பூசணி கலவையில் சேர்த்து கிளற வேண்டும். கடைசியில் போதுமான அளவு நெய் சேர்த்து இறக்க வேண்டும். சூடான, ருசியான பூசணி அல்வா தயாராகி விட்டது. நாவில் ஊறும் தித்திப்பான சுவை. உடம்புக்கும் ரொம்ப நல்லது.

-தகவல், படம் நன்றி; செஞ்சோலை 

.#PumpkinHalwa  #HowToPreparePumpkinHalwa #TastyPumpkinHalwa


Comments


View More

Leave a Comments