வெண்டைக்காய் முதல் வில்வப்பழம் வரை புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள், பழங்கள்


வெண்டைக்காய் பற்றி சில தகவல்களைத் தேடியபோது அதன் மருத்துவ குணம் அபரிமிதமானது என்பதை அறிந்தேன். பொதுவாக வெண்டைக்காய் ஊறல் நீரை அருந்துவதன்மூலம் குடல் புற்றுநோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது சிறப்புத் தகவல். 

அதேபோல் முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவுடன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லைகளை போக்குவதுடன் புற்றுநோய்க்கும் நல்லது. முசுமுசுக்கை இலையை காயவைத்துப் பொடியாக்கியும் சேர்த்துக்கொள்ளலாம். இது பொதுவாக நுரையீரல் புற்றுநோய் வராமல் பார்த்துக்கொள்ளும். 

Must Read: சென்னையில் அக்டோபர் 2ம் தேதி வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்

இவை அல்லாமல் கேரட், பீட்ரூட் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். இவற்றை பச்சையாக சாலட் போன்று செய்து சாப்பிடலாம். ஜூஸாக்கி குடிக்கலாம். துருவல், பொறியல் என செய்து சாப்பிடலாம். இயற்கை முறையில் விளையும் பசுமஞ்சள் கிடைத்தால் அதை உணவில் சேர்த்துக்கொண்டாலும் புற்றுநோயை எதிர்க்கலாம். 

வெள்ளைப்பூண்டினை வேகவைத்துச் சாப்பிடுவதும்கூட நல்லது. பாலில் வேகவைத்துச் சாப்பிடுவது மட்டுமல்லாமல் பூண்டுக்குழம்பு, பூண்டுத்துவையல் செய்து சாப்பிடலாம். இன்றுகூட பூண்டுப்பற்களை தோலுரித்து நெய்யில் வதக்கி கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி தேங்காய், புளி, உப்பு சேர்த்து துவையல் செய்தேன். 

பூண்டு சாப்பிடுவது புற்றுநோயைத் தடுக்கும்

சாப்பிடச் சுவையாக இருந்தது மட்டுமல்ல வயிறு லேசானதுபோல் இருந்தது. பொதுவாக இந்தத் துவையல் வாய்வுக்கோளாறு, செரிமானப்பிரச்சினை போன்றவற்றைப் போக்கக்கூடியது. இதுபோலவும் பூண்டினை செய்து சாப்பிடுவது நல்லது.

தக்காளி, பீன்ஸ் போன்றவையும்கூட புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடியது என்பதால் அவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். லவங்கப்பட்டையும்கூட மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது என்று அறிந்தேன். 

காலநிலை மாற்றங்களால் காய்ச்சல் எட்டிப்பார்க்க வாய்ப்பு உள்ளது. இன்றுகூட வீட்டில் ஒருவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதுபோன்ற உணர்வு தென்படுவதாகக் கூறியதும் லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து ஒரு தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். இது மழைக்காலத்து மாலைநேரத்துக்கு இதமாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ளும், வந்தாலும் விரட்டும் என்பதால் இந்த தேநீர் நல்லது. கூடவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடியது என்பதால் நாம் அவ்வப்போது முயற்சிக்கலாம்.

இந்தப்பதிவை எழுதக்காரணம், சமீபத்தில் நண்பர் ஒருவர் இன்றைய சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, அதுபற்றிய தகவல்களைச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் என்றார். அவருக்காகவும் மற்ற அனைவருக்காகவும் இந்தப் பதிவு. சிலர் சொல்வார்கள்... 

இதையெல்லாம் நாங்கள்தான் செய்யத்தானே செய்கிறோம் என்று சொல்லலாம். எப்போதோ செய்வதென்பது வேறு... அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி நம் உணவுமுறைகளை மாற்றிக்கொள்வது என்பது வேறு. துவையல் என்றால் அது தேங்காய் துவையலாக மட்டுமே இருக்கும். கொஞ்சம் மாற்றி பீர்க்கங்காய் தோல் துவையல், ஆரஞ்சு பழத்தோல் துவையல் என செய்து சாப்பிடுவது நலம் தரும். 

அதேபோல் பழம் சாப்பிடுங்கள் என்று சொன்னால் வாழைப்பழத்தை மட்டுமே சுட்டிக்காட்டுவது நம் வாடிக்கை. விளாம்பழம், வில்வப்பழம் என்பவையும் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். வில்வ மரத்தின் கொழுந்து இலையை துவையல் செய்து சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்னும்போது அதன் பழம் அதனினும் சிறந்தது.

- எம்.மரிய பெல்சின் (9551486617)

#CancerCureFoods,  #FoodForCancerPreventive   #HealthyFoodsForCancer

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

 





 


Comments


View More

Leave a Comments