செப்டம்பர் 11 ஆம் தேதி இயற்கை விவசாயப் பண்ணையை நேரிடையாகப் பார்வையிட ஒரு வாய்ப்பு…


இயற்கை விவசாயம் பற்றிய தேடல் மக்களிடம் வேகமாக வளர்ந்து வந்துள்ளது.இந்தத் தேடலுக்கு அறிவுத்தோட்டம் துணை நிற்கிறது. பொது மக்கள் அறிவுத்தோட்டத்தை நேரிடையாக பார்வையிட்டு விவரங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காளாம்பட்டு பகுதியில் உள்ள அறிவுத்தோட்டத்தில் வரும் 11ஆம் தேதி   ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை இயற்கை விவசாயம் குறித்த தகவல்களை அறியலாம். 

Must Read: மோசமான தூக்கம் காரணமாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய 3 உடல்நலப் பிரச்சனைகள்…

பூந்தோட்டம், மூலிகைதோட்டம், காய்கறித்தோட்டம், மாந்தோப்பு, பலவகை பழ மரங்கள், கோழி, தேனி வளர்ப்பு போன்றவைகள் சுற்றுக் காண்பித்து விளக்கங்கள் தரப்படும்.  மரு. சோ . தில்லை வாணன், அரசு சித்த மருத்துவர், அரசு சித்த மருத்துவமனை, பேரணாம்பட்டு அவர்கள், இயற்கை விவசாயமும் மக்கள் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்ற்ய்கிறார்.

காய்கறிகள்/ பழங்கள் ( தேங்காய்,தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, சுண்டைக்காய்) விற்பனைக்கு உள்ளது. லெமன் கிராஸ், துளசி, ஆடா தொடா, கலயாண முருங்கை, சுண்டைகாய், வல்லாரை, பிரண்டை, வெட்டி வேர், முருங்கை போன்றவைகள் வீட்டில் வளர்க்க இலவசமாகத் தரப்படும்.

இந்தச் சத்திப்பினைத் தொடர்ந்து “கோழி வளர்ப்பில் புதிய அணுகு முறை பயிற்சி நடை பெறுகிறது அனுமதி இலவசம். பதிவு அவசியம்.  தங்களது பெயர், ஊர், தொடர்பு எண், கலந்து கொள்பவர்கள் பட்டியல் ஆகிய விவரங்களை  9443032436 எண்ணிற்கு வாட்ஸ் ஆப் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் இந்தச் செய்தியினைப் பகிருங்கள். அறிவுத்தோட்ட்த்தில் சந்திப்போம்.

-கு.செந்தமிழ் செல்வன், அறிவுத்தோட்டம், 9443032436

#AgriEvent   #OrganicAgriculture   #NatureLifeStyle  

 


Comments


View More

Leave a Comments