மோசமான தூக்கம் காரணமாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய 3 உடல்நலப் பிரச்சனைகள்…
இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாமை அல்லது மோசமான தூக்கம் என்பது ஆண்களின் வாழ்க்கை சூழலை கடுமையாகப் பாதிக்கும். தூக்கமின்மை என்பது பல உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகும்.
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தினமும் சராசரியான தூக்கம் தேவைப்படுகிறது. பிஸியான வேலை மன அழுத்தம், பதட்டம் அல்லது உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது போன்ற காரணங்களால், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் போதுமான அளவு தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை.
Must Read:நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுமுறை
ஒரு ஆய்வின்படி, கிட்டத்தட்ட 29.2 சதவீத ஆண்கள் சராசரியாக ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நாள்பட்ட தூக்கக் கோளாறு என்பது ஆண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துதல், அதை அதிகம் சார்ந்திருத்தல், தாறுமாறான வேலை நேரம், மோசமான தூக்கம் அல்லது ஒழுங்கற்ற தூக்கம் போன்ற சமூக மாற்றங்கள் தூக்கமின்மையை தூண்டும் காரணிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒருமுறை தூக்கத்தை இழந்தால் கூட அதனை ஈடுசெய்ய முடியாது என்று நிபுணர்கள் சொல்கின்றனர். ஆண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளின் வெளிப்பாட்டிற்கு தூக்கமின்மைதான் காரணமாக இருக்கிறது. பெண்களை விடவும் ஆண்கள் குறைவாகவே தூங்குகிறார்கள் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. மோசமான தூக்கத்திற்கு காரணமான சில உடல்நலப் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
விறைப்பு குறைபாடு
ஏறக்குறைய 50 சதவீத ஆண்கள் பல்வேறு காரணங்களால் விறைப்புத்தன்மை குறைபாட்டை அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மோசமான தூக்கமும் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு வழிவகுக்கும். சரியாக தூங்காவிட்டால் இரவு நேரத்தில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அசாதாரணமாக குறைந்த செறிவை அடையும். இரவு நேர ஹைபோக்ஸீமியா என அழைக்கப்படும் இந்த ஒரு நிலையில் அவதிப்படும் ஆண்கள், பின்னர் மிதமான மற்றும் முழுமையான விறைப்புத்தன்மை குறைபாட்டை அனுபவிக்க வாய்ப்புள்ளது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல் என்பது விறைப்பு தன்மை குறைபாட்டுக்கு வழிவகுக்கும். இது தூக்கமின்மையில் கொண்டுபோய் விடும்.
சிறுநீரகக் கோளாறு அறிகுறிகள்
இந்த பிரச்னை பெரும்பாலும் வயதான ஆண்களுக்கு ஏற்படுகிறது. சீரற்ற வகையில் சிறுநீர் கழித்தல் , முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாமல் சிரம ப்படுதல், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கத் தயக்கம் மற்றும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்., ஏனெனில் சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் இரவில் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நிலை இரவு தூக்கத்தை பாதிக்கிறது. .
மலட்டுத்தன்மை
தூக்கம் ஆண்களின் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது. மருத்துவர்களின் கூற்றுப்படி, தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம் ஆகியவற்றின் காரணமாக விந்தணு உற்பத்தி குறைபாட்டுக்கு வழிவகுக்கும், ஒரு ஆண் குழந்தையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விந்தணுவில் குறைபாடு ஏற்படும்.
சிறந்த தூக்கத்திற்கான குறிப்புகள்
நன்றாக தூங்குவது எப்படி என்பதற்கு சிக்கலான ஆலோசனைகள் ஏதும் இல்லை. ஒரு நபர் எவ்வாறு ஒழுங்கமைந்த சூழலை மேற்கொண்டு உரிய தூக்கத்தை கடைபிடிப்பது என்பதைப் பற்றியதாகும்.
Must Read:#HowToEatPapaya பப்பாளி பழத்தை உரிய முறையில் சாப்பிடாவிட்டால் நச்சு தன்மையாக மாறிவிடும்…
சரியான வழக்கத்தில் ஈடுபடுங்கள். வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்த பகலில் சூரிய ஒளி உடலில் படுவதை உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன்பு கணினி, மொபைல் போன் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள் தூங்குவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்க்கவும், பொதுவாக மதுவின் அளவைக் குறைக்கவும். பசியோடு தூங்கக் கூடாது
போதுமான தூக்கம் இல்லாதது உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. அறிவாற்றல் குறைபாடு, இருதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் சமநிலைப்படுத்தும் வாழ்க்கை முறையை வழிநடத்துவது இந்த சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
#SleepIssue #HowToAvoidSleepIssue #SleepLossIssues

Comments
View More