#6PointsForHealthy சளியை குணப்படுத்தும் மிளகு…


1.பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்த மருத்துவ வழக்கு மொழி. 

2. `உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ' என்ற முதுமொழியும் மிளகின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

3.நெஞ்சு சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் திரிகடுகத்தில் சுக்கு, திப்பிலியுடன் இடம்பெற்றிருப்பது மிளகு.

Must Read: ஒரு வேளைக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உன்னத தம்பதி..

4.அஞ்சறைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் மிளகை ரசம், சாம்பார், புளிக்குழம்புகளில் சேர்ப்பது வழக்கம். அசைவ உணவுகளில் காரச் சுவைக்கு மிளகு சேர்க்கப்படுகிறது. 

5. மிளகானது வெறுமனே உணவில் சுவை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.  சளிப் பிரச்னைக்கு மிளகு நல்ல மருந்தாகும். 

 

சளியை போக்கும் மிளகு

6.பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து தோலுரித்த 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்து வந்தால் நெஞ்சுச் சளி விலகுவதோடு ஜலதோஷம், மூக்கடைப்பு விலகும்.

எம்.மரியபெல்சின்

(திரு.மரியபெல்சினை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

 

#BenefitsOfPepper   #PepperForHealth  #CureColdWithPepper #PepperCureCold

 

 


Comments


View More

Leave a Comments