கூந்தல் எண்ணை தயாரிக்கும் மென்பொருள்பொறியாளர்…


இயற்கை மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டால் அது என்ன செய்யும்.....!? நல்ல சம்பளத்தில் பார்த்துவந்த மென்பொருள் வேலையை விட வைக்கும்.விவசாயம் பார்க்க வைக்கும், சத்துமாவு தயாரிக்க வைக்கும். கூந்தல் எண்ணை காய்ச்ச வைக்கும்.இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் கலைமகள். பார்த்துவந்த நல்ல வேலையை உதறி தள்ளிவிட்டு வீட்டை சுற்றி பலவகையான மூலிகை செடிகளை நடவு செய்து.... தன் தோட்டத்தில் விளைந்து காய்ந்து விழும் முற்றிய தேங்காயை கொப்பரை போட்டு எண்ணை ஆட்டுகிறார். \

Must Read: பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை பசியாறுங்கள்…. திண்டிவனம் இளைஞரின் அறப்பணி

பின்னர் அதில் கரிசாலை, செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, ரோஜா  பூ, அருகம்புல், வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய், கருஞ்சீரகம்,வேப்ப இலை, கற்றாழை,,வெந்தயம்,,மருதாணி,,நெல்லிகாய் கறிவேப்பிலை போன்றவைகளை சேர்த்து செக்கு எண்ணையில் காய்ச்சி மிக தரமான கூந்தல் எண்ணை தயாரிக்கிறார்.

கலைமகள் கூந்தல் எண்ணைய்

தேவையான மூலப்பொருட்களை இவரே விளைய வைக்கிறார். தனி ஒரு மனுஷியாய் விவசாயம்,மதிப்பு கூட்டல் பணிகளை ஓய்வில்லாமல் செய்துவருகிறார். இளநரை,முடி உதிர்வு,பொடுகு தொல்லை,முடி உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாய் அமைந்திருக்கும் இவர் தயாரிக்கும் எண்ணை நாகர்கோவிலில் உள்ள பசுமை அங்காடி வாடிக்கையாளரிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் ஒன்று.... எண்ணை தீர்ந்துவிட்டால் உடனடியாக இவரிடமிருந்து வந்து சேராது. தமிழ்நாட்டில் குறிப்பிட் நான்கு கடைகளை மட்டுமே தேர்வு செய்து எண்ணை அனுப்புகிறார். அதில் பசுமைசாகுலின் கடையும் ஒன்று. ஒரு மாத காத்திருப்பிற்கு பின் கலைமகள் கூந்தல் எண்ணை நேற்று அங்காடி வந்து சேர்ந்தது. ஏன் இத்தனை தாமதம்னு கேட்டா.... ஒரு ஆளாய் வேலை செய்யறேன் சாகுல்... மழை வேற பெய்யுது. விறகடுப்புலதான் எண்ணை காய்ச்சனும்.... தரமாக தரனுமா இல்லையா.கொஞ்சம் காத்திருக்கத்தான் வேணும் என்று நம் வாயை அடைத்து விடுகிறார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைமகள் எனும் இயற்கை விவசாயியை 9972250949 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#OrganicFarming  #OrganicFarmer #NaturalHairOil  #KalaiMagal

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments