பெண்கள் பீரியட்ஸின் போது உடல் ஆற்றலுடன் திகழ உண்ண வேண்டிய உணவுகள்…


 

மாதவிலக்கு என்பது வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இதன் காரணமாக 21 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு மாத த்துக்கு ஒருமுறையே பெண்களின் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் கழிவாக வெளியேறுகிறது. இதனால் அந்த நாட்களில் அவர்கள் உடல் ஆற்றல் குறைந்து பலவீனமாக இருக்க நேரிடும். 

எனவே மாதவிலக்கின் போது பெண்கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். குறிப்பாக கால்சியம் மற்றும் ஒமேகா 3 நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவுகளை உட்கொள்வது நல்லது. 

Must Read:உடலில் நீர்ச்சத்தை வறண்டு போகச்செய்யாதீர்கள்

இயற்கையை அடிப்படையாக க் கொண்ட உணவு முறைகளே பீரியட்ஸ் காலகட்டத்துக்குப் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும்.  பீரியட்ஸின் போது உணவு உண்ணுவதைத் தவிர்க்கக்கூடாது. சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

பீரியட்ஸின்போது உண்ண வேண்டிய உணவுகள்

 

இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை உலர் பழங்கள், பாதாம், முந்திரி போன்ற சத்தான பொருட்களை உண்ணலாம்.  தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு உண்ணவும்.  சாப்பாட்டுடன் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடிக்கவேண்டும். 

சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து தண்ணீர் நிறையக் குடிக்கலாம். பீரியட்ஸ் எனும் மாதாந்திர சுழற்சியின்போது பெண்கள் சோர்வடைவது, வயிற்று வலி போன்றவற்றால் அவதிப்பட நேரிடும் அவர்கள் இதுபோன்ற உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் பீரியட்ஸ் வலியிலிருந்து தற்காலிக தீர்வு காணலாம்.


#FoodsForPeriodsTime  #HealthyFoodsForPeriodsTime #MaintainHealthyAtPeriodTime

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments