தி.நகர் வாணி மகால் கேப்பிட்டல் கிச்சன் உணவுகள் எப்படி இருக்கிறது தெரியுமா?


சென்னை மாநகரில் டிசம்பர் மாதம் என்பது தொடக்கத்தில் மழை சில நாட்களும், பிறகு குளிராகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் காதுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் இசைவிழாக்கள் சென்னையில் உள்ள பிரபல சபாக்களில் நடைபெறுவது வழக்கம். 

டிசம்பர் சீசன் என்று அழைக்கப்படும் இசைவிழாக்களை கண்டுகளிக்க வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வருவது வழக்கம். சென்னை தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களை சுற்றியிருக்கும் சபாக்கள் டிசம்பர் சீசனின் நிரம்பி வழியும். 

சங்கீத வித்வான்கள், ரசிகர்களால் சபாக்கள் நிரம்பி வழிவது ஒருபுறம் இருக்க, வயிற்றின் ரசனைக்கும் தீனிபோட சபாக்களில் உள்ள கேன்டீன்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். கொரோனா காலகட்டம் முடிவடைந்தது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் டிசம்பர் சீசன் களை கட்டியுள்ளது. 

கேப்பிட்டல் கிச்சன்    

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மகாலில் சங்கீத வித்வான்களின் இசையை கேட்க ரசிகர்கள் குவிகின்றனர். இன்னொருபுறம் இந்த சபாவின் உள்ளே இருக்கும் கேன்டீனிலும் கூட்டம் அள்ளுகிறது. நாம் அண்மையில் கேன்டீனுக்கு சென்று வந்தோம். கேப்பிட்டல் கிச்சன் என்ற சமையல் கலை குழுவினர் விதம் விதமான சைவ உணவை சமைத்து வழங்குகின்றனர். மதியம், இரவு என இரண்டு நேரங்களில் மட்டுமே உணவு வழங்குகின்றனர். 

மதியம் இலை சாப்பாடு என்ற தலைப்பில் 250 ரூபாய்க்கு சைவ உணவை வழங்குகின்றனர். பருப்பில் தொடங்கி பாயாசம் வரை வீட்டில் செய்து உண்பது போல ருசியாக இருக்கிறது என்று அங்கு உண்டவர்கள் சொல்கின்றனர். 

Must Read: சின்ன மெஸ். பெரிய மனஸ்…எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவ பகிர்வு…

நாம் வாணிமகால் சென்ற நேரம் மாலை நேரம் என்பதால் டிபன் மட்டுமே சாப்பிட முடிந்தது. அங்கிருக்கும் சர்வர்கள் ஓடோடி வந்து கவனிக்கின்றனர். கிச்சடி மட்டும் ஆர்டர் செய்தோம். கிச்சடி ஒரு பிளேட்டில் வந்தது. சிறிய கரண்டியில் இருந்து இரண்டு கரண்டி கிச்சன் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. 

கிச்சடிக்கு ஏற்றது எப்போதுமே சட்னிதான். எனவே கிச்சடியோடு சாம்பார் வந்தபோதும் அதனை தொடவில்லை. சட்னியோடு சாப்பிட்டேன். தேங்காய் சட்னியை மட்டும் தொட்டு உண்பதை கண்ட சர்வர், மீண்டும் ஒரு கப் தேங்காய் சட்னி கொண்டு வந்து வைத்தார். அபாரமாக இருந்தது. தக்காளி சட்டினியும் கிச்சடிக்கு ஏற்ற ருசியோடு இருந்தது 

 அளவு அதிகம் இன்றியும், அதே நேரத்தில் குறைவான அளவு என  சொல்ல முடியாமலும் மாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு ஏற்றார்போலவே கிச்சடியை உண்ணமுடிந்தது. கிச்சடி முடித்து விட்டு ஒரு காஃபி ஒன்று குடித்தோம். காஃபி திக்கான பாலில் டிகாசன்கலவை அற்புதமாக இருந்தது. நல்லதொரு காப்பியை சாப்பிட்ட திருப்தியைத் தந்தது. 

தி.நகர் பக்கம் செல்வோர் வாணி மகாலில் வரும் 31ஆம் தேதி வரை கேப்பிட்டல் கிச்சனின் விருந்தில் சாப்பிடும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். இல்லையெனில் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். 

-ருசிபிரியன் 

#ChennaiDecemberSeason #ChennaiSabhaCanteen #DecemberSeason2022

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 
 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Comments


View More

Leave a Comments