தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்
இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள்
நடைபெற உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு
வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள்
வானகம் நடத்தும் மரபு தின்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி
மரபு தானியங்களை தின்பண்டங்கள் வழியே உணவில் சேர்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக வெளி தின்பண்டங்கள் தயாரிப்பில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சியினை மக்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர். அதன் அடிப்படையிலே வானகம் முன்னெடுக்கும் மரபு தின்பண்டங்கள் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். பயிற்சியில் கீழ்கண்ட தயாரிப்புகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்படும்.
->தேன்குழல்( கரும்பு சர்க்கரை ஜிலேபி)
->கரும்புச் சர்க்கரை லட்டு
->கரும்புச் சர்க்கரை மைசூர்பாகு
->மாப்பிள்ளைச் சம்பா தித்திப்பு சேவு
->தூயமல்லி கை-முறுக்கு
->வல்லாரை தட்டை முறுக்கு
->தினை முள்-முறுக்கு
->பயிறு மிக்சர்
ஆவூர்.முத்து பயிற்சி அளிக்கிறார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை (12-09-21) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் 30 நபர்கள் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் . முன்பதிவுக்கு: 8825810072 , 9445879292 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். .
குறிப்பு : பயிற்சியின்போது அரசு அறிவுறுத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது. பாலித்தின் பைகள்,சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதி இல்லை.
நன்கொடை விவரம்
நன்கொடை ரூ. 750. முன்பதிவு செய்த பிறகு தொகையை கீழே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்தவும்
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavur branch, Karur(Dt), Tamilnadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
-நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,கடவூர், கரூர்.
#AgriEvents #OrganicTraining #NaturalLife
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

Comments
View More