#AgriEventsCalendar சென்னையில் வரும் 26ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி…
வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி வரும் 26ம் தேதி சென்னை முகப்பேரில் நடைபெற உள்ளது.
இதில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
1. விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
2. மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தில் தேனீ வளர்ப்பது எப்படி ?
3. தேனில் மதிப்புகூட்டுதல் எப்படி ?
4. மகரந்தம் ( ம ) அரசகூழ் ( Royal jelly ) எடுப்பது
26ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் 3 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி பங்களிப்பாக ரூ.500 மட்டும் வசூலிக்கப்படும். பயிற்சியின் போது மதிய உணவு வழங்கப்படும். தேன் பூச்சி செல்வகுமார் பயிற்சி அளிக்க உள்ளார். நிகழ்வை ஒருங்கிணைப்பவர் சிவகாமி.
Must Read: இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை..
பயிற்சி நடைபெறும் இடம்; டிஏவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1140, 20வது தெரு, வெஸ்ட் எண்ட் காலனி, அண்ணா நகர் வெஸ்ட் எக்ஸ்டேன்ஷன், முகப்பேர்,சென்னை 50. முன்பதிவு செய்ய : +91 83444-72966, +91 87544-40017 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
#AgriEventsCalendar #AgriEvents #AgriEventsChennai
Comments