சென்னையில் நாளை இயற்கை மாம்பழ திருவிழா…


வள்ளுவம் இயற்கை சந்தை சார்பில் நாளை (ஜூன் 18) சென்னை அண்ணாநகர் பகுதியில் இயற்கை  மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக  பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், மரபு இசை கருவிகளுடன் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. 

தூய இயற்கை உணவுகள், காய்கறி - கீரைகள் ,பாரம்பரிய அரிசிகள், சீர்தாணியங்கள், பருப்பு வகைகள், சமையல் பொடி வகைகள்,  குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் ,சமையல் மண்பாண்டங்கள்,  துணி பைகள், சணல் கைவினை பொருட்கள், பனை ஓலை பொருட்கள் ,சிற்பங்கள்  ஓவியங்கள் என இயற்கை சார்ந்த  பொருட்களை உற்பத்தி செய்யும் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களும் ஒருங்கிணைந்த நிகழ்வாக இந்த ஆர்கானிக் விற்பனை சந்தை நடைபெற உள்ளது. 

Must Read: இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிப்பா?

இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , இயற்கை உணவு / இயற்கை விவசாயம் / இயற்கை மருத்துவம் / சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்‌ மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நிகழும் . இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும். 

அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக் பள்ளியில் நடைபெற உள்ள இந்த நிக்கழ்வை  நம்மாழ்வார் மக்கள் குழு முன்னின்று நடத்துகின்றது. இயற்கை விளைபொருட்களை வாங்கிட நுகர்வோரின் ஆதரவு மட்டுமே இயற்கை விவசாயம் செய்யவும் அவை சார்ந்த மதிப்புக்கூட்டு உற்பத்தி செய்திடவும் வழிவகை செய்யும் .

இயற்கை வேளாண் சந்தை

ஆகவே இந்த நிகழ்வுக்கு அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். சந்தை நிகழ்வில் தன்னார்வலர்களாக பங்காற்ற விரும்பும் நண்பர்கள் 9566667708 என்ற எண்ணுக்கு அஅழைக்ககவும். இதே மொபைல் எண்ணில் நுகர்வோரின் தேவைகளும் யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

அனுமதி இலவசம். நிகழ்ச்சியை வெற்றிமாறன்.இரா  ஒருங்கிணைக்கிறார். மேலும் தொடர்புக்கு 9566667708 /  7448558447 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்வு நடைபெறும் இடத்தின் வரைபட வழிகாட்டல் இணைப்பு; https://indiapl.com/tamil-nadu/leo-matriculation-higher-secondary-school-263564   பேரன்புடன் அழைக்கிறோம் 


#நம்மாழ்வார்மக்கள்குழு #வள்ளுவம்இயற்கைசந்தை  #Nammalvar_people_forum #organicfarming #organic #organicmarketing #annanagarchennai 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 


Comments


View More

Leave a Comments