இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிப்பா?


நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது இந்தியாவில்  2019 ஆம் ஆண்டில் 70 மில்லியன் மக்களுக்கு இருந்தது. இதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இப்போது 101 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து மருத்துவ இதழான ‘லான்செட்’ இல் வெளியிடப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவிக்கிறது. 

சில வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இந்த எண்ணிக்கை நிலையாக இருந்தாலும், பலவற்றில் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன, குறைந்த பட்சம் 136 மில்லியன் மக்கள், அல்லது 15.3% மக்கள், முன் நீரிழிவு நோயைக் கொண்டுள்ளனர்.

Must Read: இயற்கை வாழ்வியல் குறித்த 2 பயிற்சிகளை தவற விடாதீர்கள்…

கோவா 26.4%, புதுச்சேரி 26.3% மற்றும் கேரளாவில் 25.5% சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. தேசிய அளவிலான பாதிப்பு சராசரியாக 11.4% ஆக இருக்கிறது. 

அடுத்த சில ஆண்டுகளில் உ.பி., ம.பி., பீகார் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகள் எணிக்கை அதிகரிக்கும்  அபாயம் இருப்பதாக ஆய்வு எச்சரிக்கிறது. “கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் சண்டிகரில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை பாதிப்பு  குறைவாக உள்ளது. 

புதுச்சேரி மற்றும் டெல்லியில் நீரழிவு நோய்க்கு முந்தைய நிலை பாதிப்பு ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளன, நீரிழிவு நோயின் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில், விஞ்ஞானிகள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

நீரழிவு நோயாளிகள்  எண்ணிக்கை அதிகரிப்பு

உதாரணமாக, உ.பி.யில் நீரிழிவு நோய் பாதிப்பு 4.8% உள்ளது, இது நாட்டிலேயே மிகக் குறைவு, ஆனால் தேசிய சராசரியான 15.3% உடன் ஒப்பிடும்போது 18% பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய பாதிப்பு நிலையைக் கொண்டுள்ளனர்.  “உ.பி.யில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ள நிலையில் , சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் பாதிப்பு நான்கு பேருக்கு உள்ளது. இந்த நான்கு பேரும்  விரைவில் நீரிழிவு நோயாளிகளாக மாறுவார்கள் என்பதுதான் இதன் பொருள்” என்று டாக்டர் அஞ்சனா கூறினார். 

இந்த எண்ணிக்கையானது மத்தியப் பிரதேசத்தில், ஒரு உறுதி செய்யப்பட்ட சர்க்கரை நோயாளிக்கு , 3 பேர் முன் நீரழிவு நோய் பாதிப்பு நிலையைக் கொண்டவர்களாக உள்ளனர்.  "சிக்கிம் மாநிலத்தில் நீரிழிவு நோய் மற்றும் முன் நீரிழிவு இரண்டும் அதிகமாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேவை

ப்ரீ-டயாபெட்டிக் என்பது சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிகமாக இருக்கும் ஆனால் டைப்-2 நீரிழிவு என்று கருதும் அளவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்காது., நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். 

சர்க்கரை நோய்க்கு முந்தையவர்கள் எப்படி சர்க்கரை நோயாளியாக  மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. "நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில ஆண்டுகளில் நீரிழிவு நோய்க்கு ஆளாகக் கூடும்..ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இவர்கள் நிலைமையை மாற்றியமைக்கலாம்,” என்று மூத்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி மோகன் கூறினார்.

Must Read: இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத கட்டுரை…

ஆய்வின்போது, விஞ்ஞானிகள் அக்டோபர் 18, 2008 மற்றும் டிசம்பர் 17, 2020 க்கு இடையில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பரிசோதித்தனர். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 74 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கெடுப்பு அனைத்து குறைந்த-பரவல் கொண்ட வடகிழக்கு மாநிலங்களையும் சேர்த்து, பாதிப்பு 72 மில்லியனாகக் குறைந்தது.

உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் பருமன் போன்ற பிற ஆபத்து காரணிகளும் அதிகம். இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் அபாயங்களை அதிகரிக்கிறது. கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் குறைந்தது 35.5% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது மற்றும் 81.2% பேருக்கு அசாதாரண அளவு கொலஸ்ட்ரால் (டிஸ்லிபிடெமியா) உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 

 28.6% பேர் பொது உடல் பருமனைக் கொண்டிருந்தாலும், 39.5% பேர் வயிற்றுப் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டது. "மாநிலங்களுக்கிடையில் இந்த விகிதத்தில் பெரும் மாறுபாடு உள்ளது, எனவே ஒவ்வொரு மாநிலமும் சுகாதார சிக்கல்களைத் தடுக்க வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று இந்திய (இந்தியா-நீரிழிவு) நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் அசோக் குமார் தாஸ் கூறினார்.

செய்தி ஆதாரம்; டைம்ஸ் ஆப் இந்தியா

#DiabetesInIndia  #DiabetesAffect #DiabetesResearch

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments