“மீன் அசைவம் என்று சொல்வதால், அதில் உள்ள சத்துகளை பலர் அறிவதில்லை…”


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தொடர்ந்து மீன் உணவுகளுக்கு ஆதரவாக தமது கருத்துகளை முன் வைத்து வருகிறார். அவர் பின்பற்றும் அரசியல் கொள்கைகள் வேறு  மாதிரியாக இருந்தாலும், உணவு விஷயத்தில் பொதுவான கருத்தை முன் வைப்பது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. 

மேற்கு வங்கத்தில் மீன் சைவமா? 

தமிழிசை அவர்கள் முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் இப்படி ஒரு கருத்தை முன் வைத்தார். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, ``எனக்குப் பிடித்தமான மீன்தான். மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். 

Must Read: “தேவலோகத்தில் அமுதம் என்பது பூலோகத்தில் மோரும், மோர் சாதமும்…”

மீன் ஒரு சைவ உணவு. தாவரங்களுக்கு அடுத்து கடல்வாழ் உயிரினங்களான மீன்களை உண்ணலாம். ராஜ்நிவாஸில், மேற்குவங்க நாள் கொண்டாடப்பட்டபோது மீன் உணவைச் சமைத்தனர். அவர்கள் மீனை அசைவமாக நினைக்காமல் சைவமாகத்தான் நினைக்கிறார்கள்" என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 

மீன் உணவு

விகடன் கருத்து 

இது பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கட்டுரை வெளியிட்ட விகடன் இணையதளம், சைவ உணவு உண்பவர்கள் மீன் மற்றும் கடல் உணவுகளைச் சேர்த்துக்கொண்டு, மற்ற விலங்குகளின் இறைச்சியைத் தவிர்த்தால், அவர்கள் பெஸ்கேட்டரியன்களாக (Pescatarian) கருதப்படுகிறார்கள் என்று கூறியிருந்தது. 

மீன் உணவுக்கு வலுவான ஆதரவு 

இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உடல் நம் தேறிவருவதற்கு மீன் உணவு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதில் ஒமேகா 3 உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. மீன் உணவு அசைவம் என சொல்வதன்மூலம் அதில் உள்ள சத்துகள் நமக்கு கிடைக்காமல் போகிறது.

Must Read: தினமும் ஒருவேளை சிறுதானிய உணவு சாப்பிட அமைச்சர் அறிவுரை

முட்டைக்கு இதுபோன்ற விவாதம் எழுப்பப்பட்டு இப்போது சைவர்களும் முட்டை சாப்பிடுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மீன் சைவ உணவுதான். அங்கு கடல் பூக்கள் என்று அதனை சொல்கின்றனர். நாமும் அதனை முயற்சி செய்யலாம்.

விருப்பப்பட்டவர்கள் மீன் உணவை சாப்பிடலாம். அது அசைவ உணவாக இருக்கிறதே என்று ஏங்கிக் கொண்டிருப்பதை விட ஒரு முடிவெடுத்து அதை சாப்பிடத்தொடங்கலாம். எனக்கு எல்லா வகை மீன்களும் பிடிக்கும்,” என்றார்.

#seafoods  #fish #puducherryltgovernor #TamilisaiSoundararajan

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments