தினமும் ஒருவேளை சிறுதானிய உணவு சாப்பிட அமைச்சர் அறிவுரை
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, நடப்பு 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ. நாடுகள் சபை அறிவித்தது. தமிழ்நாட்டில் இந்த கருத்தை மையப்படுத்தி கல்வி நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், இயற்கை வேளாண் வணிகர்கள் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக அண்மையில் சென்னை அருகில் உள்ள பட்டாபிராம் பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் சிறுதானிய உணவு பேரணி, கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
Must Read: தாய்பாலுக்கு மாறாக வேறொன்றை முயற்சிப்பது நல்லதல்ல...
இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார். சி.டி.எச். சாலையில், பட்டாபிராம் காவல் நிலையம் முதல், இந்துக் கல்லூரி வரை சுமார் ஒரு கி.மீ. தூரம் நடைபெற்ற சிறுதானிய உணவு பேரணியில், கல்லூரி மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் இந்துக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஆர்.காந்தி, சிறுதானியங்கள் நிறைந்த உணவை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
Must Read: வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?
ஆகவே, தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
#worldmilletsyear2023 # milletsfoodfestival #milletsfood
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More