
“முட்டைக்ரேவியை சூடாக ஆப்பத்தின் மீது ஊற்றினால் ஆப்பம் மென்மையாக ருசியாக இருக்கும்”
ஆப்பத்துக்கு ஏற்ற சைட் டிஷ் எது?
முட்டை கிரேவி ஆப்பம் சைட் டிஷ்
முட்டைகிரேவியால் ருசி கூடும் ஆப்பம்
ஆப்பம்னா தேங்காய் பால் தான் காம்போவா இருக்கணுமா கொஞ்சம் மாத்தி பார்க்கலாமேன்னு ரசனையா ஒருத்தர் கண்டுபிடிச்சதுதான் இந்த முட்டை க்ரேவி! பொதுவா ஆப்பத்திற்கு கறிக் குழம்பு வகைகள் எல்லாம் பட்டாசா இருந்தாலும், முட்டை க்ரேவிக்குன்னு ஒரு தனி ருசியே இருக்கு.
ஆப்பம், கிரேவி, முட்டை
சுடச்சுட ஆப்பமும் அதுக்கு நல்ல திக்கான பதத்தில் லேசா காரம் தூக்கலா இருக்கும் க்ரேவியும் அந்த க்ரேவியில் நன்கு ஊறிய அவித்த முட்டையும் இந்த மூன்றின் ருசியும் உங்கள் நாவில் கைகோர்த்து ஆடும் ஆட்டம் இருக்குதே அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
முட்டை க்ரேவியே பல ரகம் இருக்கு க்ரேவியில் முட்டையை உடைத்து போட்டு செய்வது.பெப்பர் எக் மசாலா, கடாய் எக் க்ரேவி, அவித்த முட்டையை வறுத்து சேர்ப்பது, ஒயிட் எக் மட்டும் வைத்து செய்வது, முட்டையை சுருளாக சீவி சேர்ப்பது என பல வகைகள் இருந்தாலும், முழு முட்டையை அவித்து லேசாக அதை கீறி அதை க்ரேவியில் நன்கு ஊற வைத்து பரிமாறப்படும் முட்டை க்ரேவியே ஏ-ஒன் ரகம் எனலாம்.
Must Read: அண்டை மாநிலங்களில் கள் விற்க அனுமதி..தமிழ்நாட்டில் ஏன் இல்லை?
க்ரேவியில் வேறு எந்த காயும் துண்டுகளாக இருக்கக்கூடாது. வெங்காயம், தக்காளி போன்றவற்றை அரைத்தே பயன்படுத்தணும், மசாலா, காரம் எல்லாம் சரியான பக்குவத்தில் இருக்கணும். கிட்டத்தட்ட மாங்கா ஊறுகாய் தொக்கு கன்சிஸ்டன்சியில் க்ரேவி இருப்பது சாலச் சிறந்தது. அவித்த முட்டை மீது சந்தனம் பூசியது போல க்ரேவி இருக்கவேண்டும்.
ஆப்பத்தின் வெவ்வேறு ருசிகள்
இந்த க்ரேவி மஞ்சள் நிறத்திலும் தாபா ஸ்டைலில் செய்தால் வத்தக்குழம்பு நிறத்திலும் இருக்கும். தாபா ஸ்டைலில் க்ரேவி பாயாசம் திக்னஸில் இருக்கும். பொதுவா ஆப்பத்தை சிறிது ஆறவிட்டால் கூட ரப்பர் போல இறுகிவிடும். அதில் தேங்காய் பால் ஊற்றுவதே அதை மென்மையாக்கத்தான்.அதே போலத்தான் முட்டைக்ரேவியும். இதை சூடாக ஆப்பத்தின் மீது ஊற்றினால் ஆப்பம் மென்மையாகி ருசியாக இருக்கும்.
ஆப்பம் எப்போதும் சூடாக சாப்பிடும் போது ஒரு ருசியிலும் ஆறிய பின் சாப்பிடும் போது ஒரு ருசியிலும் இருக்கும். முட்டை க்ரேவியும் அப்படித்தான். சூடான முட்டையோடு சாப்பிடுங்களேன். பின்னர் அந்த ருசியில் சொக்கிப் போவீர்கள். புதுக்கோட்டையில் முட்டை மாஸ் என்னும் ஒரு வகை உள்ளது.
அவித்த முட்டையை நான்காக நறுக்கி வெங்காயம், தக்காளி, கார சிக்கன் குழம்பு எல்லாம் ஊற்றி தோசைக் கல்லில் பிரட்டி தருவார்கள். அது தான் முட்டை க்ரேவியின் T/20 வெர்ஷன். தாபா முட்டை க்ரேவியானது ஒரு நாள் கிரிக்கெட் போல அதன் தனித்த ருசியில் பட்டையைக் கிளப்பும். நெய் க்ரேவின்னு எங்க அப்பா ஒரு க்ரேவி வைப்பார். அதுவே முட்டை க்ரேவியின் டெஸ்ட் மேட்ச் வெர்ஷன். அந்த க்ரேவியில் ஒரு சிறப்பும் இருக்கு சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதில் உருளைக் கிழங்கு, பனீர்,காளான், பேபி கார்ன் போன்ற வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
புரோட்டாவுக்கும் முட்டை கிரேவி
ஆப்பம் மட்டுமல்ல பூரி, சப்பாத்தி, புரோட்டா வகைகளுக்கும் அந்த க்ரேவி படு ஸ்மார்ட்டாக கம்பெனி தந்து சிறப்பிக்கும். சென்னை மிலிட்டெரி ஓட்டல்களில் ஆப்பம் முட்டைக்கறி என்பார்கள். அது சிக்கன் மட்டன் ருசிக்க பணமில்லாதவர்களின் நாக்கிற்கு ஆறுதல் கூறும்.
பாண்டியன், புகாரி, முஸ்தபா, மவுண்ட் பேலஸ், கேம்பஸ், ஶ்ரீராக் என சென்னையின் எல்லா கடைகளிலும் ஆப்பம் முட்டைக் க்ரேவி ருசித்ததுண்டு (இன்றும் இருக்கிறது) அதிலும் புகாரியின் முட்டை க்ரேவி அலாதியான ருசியில் இருக்கும்! கேரளாவில் எல்லா அசைவ ஓட்டல்களிலும் ஆப்பம் முட்டைக்கறி கிடைக்கும்.
Must Read: சர்ச்சைக்கு உள்ளான அடையாறு ஆனந்தபவன்… இப்போதைய விற்பனை எப்படி?
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அசைவ கடைகளில் இது நல்ல ருசியில் கிடைக்கும்! கேரளாவின் கொட்டை அரிசிக்கு பயந்து முட்டை க்ரேவியை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறேன். ஸ்டூ எனப்படும் வெள்ளை நிற க்ரேவியில் போத்துக்கறியோடு முட்டையும் சேர்த்து சேட்டன்கள் தருவார்கள்.
இன்றைக்கு யூடியூபர்ஸ் வாயிலிருந்து அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லான “வேற லெவல்” அந்த க்ரேவிக்கு சிறப்பாக பொருந்தும். என் தம்பி குடல் கறி குழம்போடு முட்டை சேர்த்து வைப்பான். அது ஆப்பத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கும் பிரமாதமாக இருக்கும்.
தாபாக்களில் செய்யும் முட்டை க்ரேவி காரம் சற்று தூக்கலாக இருந்தாலும் அவித்த முட்டையோடு சாப்பிட ஆனந்தம் தரும். பஞ்சு போல ஆப்பம், காரமான க்ரேவி, அவித்த முட்டை மூன்றையும் இணைத்து உண்ணும் அந்த ஒவ்வொரு விள்ளலும் ருசிப்பவர் நாக்கிற்கு சொர்க்கத்தை காட்டும்! இதோ இன்று அந்த சொர்க்கம் எங்கள் வீட்டிலும். இந்த ருசியான ரெசிபியை எப்படி செய்வது என்பது குறித்து அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்;
https://www.facebook.com/groups/228786641780402/permalink/288758919116507/
கட்டுரை நன்றி; திரு.வெங்கடேஷ் ஆறுமுகம்
#appamwithegggravy #appam #appamsidedish
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments