இனிதே நிறைவடைந்தது சமைக்காத உணவு முறை பயிற்சி


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

உணவுத்திருவிழாக்கள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். 

Also Read: இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா? வெளியன் சம்பா அரிசியில் செய்து பாருங்கள்!

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

மதுரையில் வானகம், வள்ளுவம், தான்யாஸ் இயற்கையகம் இணைந்து நிகழ்த்திய சமைக்காத உணவு பயிற்சி மற்றும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் பயிற்சி இனிதே நிறைவானது .மதுரை வேளாண் பல்கலைக்கழகம் MABIF வளாகத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களை தான்யாஸ் தினேஸ் வரவேற்று நிகழ்வின் நோக்கங்கள் குறித்து விளக்கினார் . ஐயா நம்மாழ்வாரின் சிந்தனைகளை வானகம் வெற்றிமாறன் இரா  பகிர்ந்துகொண்டு ஐயா நம்மாழ்வாரின் வாழும் கிராமம் காணொளி காண்பிக்கப்பட்டது. 

மதுரையில் நடைபெற்ற சமைக்காத உணவு முறைப் பயிற்சி

அதைத்தொடர்ந்து 'no oil no boil" சமைக்காத உணவு  செய்முறைகளை இயற்கையாளர் கும்பகோணம் ரமேஷ் அவர்கள் துவங்கி கருவேப்பிலை கீர் , சமைக்காத இட்லி சட்னி, தக்காளி சோறு,  தேங்காய்ப்பால் தயிர் சாதம், பீட்ரூட் ஊறுகாய், இனிப்பு பீட்ரூட் லட்டு, அவுல் பாயாசம், காய்கறி பசும்பொறியல், இனிப்பு வெண்டை , புதினா எழுமிச்சை சாறு , என சமைக்காத உணவு விருந்து மதிய உணவாக தயாரானது .

Also Read:நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள்..இயற்கை ஆர்வலர்கள், ஊடகங்களின் வெற்றி!

வீட்டுத் தோட்டம் மாடித்தோட்டம் செயல்வழி பயிற்சியாக இருமடிப்பு பாத்தி அமைத்தல் மற்றும்  மாடித்தோட்டம் அமைக்கும் எளிய வழிமுறைகள் ஆகியவற்றை(  வானகம் வெற்றிமாறன்) நான் பகிர்ந்து கொண்டேன் .மதுரையில் இது போன்ற தொடர் இயற்கை வாழ்வியல் சார்ந்த வகுப்புகளை நிகழ்த்த வேண்டி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொண்டனர் . தொடர்ச்சியாக இயற்கை சார்ந்த நிகழ்வுகளை நிகழ்த்துவதாக உறுதியளித்தோம் .

- வெற்றிமாறன்.இரா ( 9566667708 )

வானகம் - நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் .

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtMadurai 


Comments


View More

Leave a Comments