அம்மா உணவகங்கள் தற்போதைய நிலவரம்...


மாநகரங்களில் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்களின் பசியைப் போக்க தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை சாந்தோமில் தொடங்கப்பட்டது.  அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதியம் கலவை சாதங்கள் தலா 5 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது  

ஏழை, எளிய மக்கள் தங்களுடையை பசியை கவுரவமான முறையில் போக்கிக் கொள்ளும் வகையில் அட்சயபாத்திரமாக அம்மா உணவகம் இருந்து வருகின்றன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியுது. 

தொடங்கப்பட்ட காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம், நிதி இல்லாத தன் காரணமாக நலிவை சந்தித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. 

Must Read:  காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

அம்மா உணவகங்களின் நிலை

உதாரணமாக அண்மையில் தினந்தந்தி நாளிதழ் சேலம் மாநகராட்சி சார்பில் அந்த மாநகரில் செயல்படும் அம்மா உணவகங்கள் பற்றி விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு ஆண்டில் ரூ.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 

Must Read: ஆதி குடிகளின் நஞ்சில்லா ஏலக்காய் விவசாயம்…

கொரோனா காலத்தில் பொது ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனால் பல ஏழை, எளியவர்களின் பசி போக்கப்பட்டது. ஏராளமானோர் அம்மா உணவகங்களில் உணவு உண்டனர். 

அம்மா உணவகம் விலை பட்டியல்

அம்மா உணவகங்களுக்குப் பதில் பெரியார் அல்லது கருணாநிதி பெயரில் உணவகங்கள் தொடங்கலாம் என அரசு திட்டமிட்டதாக ஒரு செய்தி இருந்தது. இதனை அரசு மறுக்கவோ ஆதரிக்கவோ செய்யவில்லை. 

அம்மா உணவகங்களில் மதியம் கலவை சாதம் தவிர, முழு உணவு வழங்கினால் இன்னும் வரவேற்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த அரசு அதனை செய்யுமா என்று மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. 

#AmmaUnavagam  #AmmaUnavagamPrice  #LowPriceFood    #PeoplesFood 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments