ஆதி குடிகளின் நஞ்சில்லா ஏலக்காய் விவசாயம்…
ஆர்கானிக் விளைபொருட்களை நான் நிலத்தில் தேடாமல் காடுகளில் தேடிக்கொண்டிருக்கிறேன். நீர்,நிலம்,காற்று என அனைத்தும் மாசடைந்து போன இந்த பூமியில் மிச்சமிருக்கும் காடுகளில் நமக்கான உணவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
பழமை மாறா பழங்குடி விவசாயம்
வனத்தில் விவசாயம் செய்யும் பழங்குடிகளை தேடிய எனது பயணம். ரசாயன தீண்டல்கள் இல்லாத உள்காட்டு விவசாயம்... செழுமையான மண், மாசற்ற காற்று, சுத்தமான ஊற்றுநீர் இதனையே பிரதானமாக கொண்டு விவசாயத்தில் ஈடுபடும் பழங்குடிகளின் விவசாய பொருட்களை சந்தை படுத்தும் முயற்சியே எனது வனப்பயணங்கள்.
ஏலக்காய் ஆபத்து..!
ஏலக்காய் பொதுவாக சந்தைகளில் விற்க படுவது வணிக நோக்கத்தில் விளைவிக்கப்படுவது ஆனால், இயற்கை முறையில் உள்ளபடி விளைவிப்பது மலைவாழ் மக்களான ஆதி குடிகள் மட்டும்தான்.
Must Read:வானகம் நடத்திய 3 நாள் இயற்கை வேளாண் பயிற்சி இனிதே முடிவுற்றது…
சந்தைக்கு பொதுவாக வரும் ஏலக்காயில் அளவுக்கு அதிகமாய் பூச்சி மருந்து தெளித்துதான் விவசாயம் செய்கிறார்கள். பூச்சி மருந்து தெளிக்காமல் ஏலக்காய் விளைவிக்கவே முடியாது என்கிற மனநிலையில்தான் நம் விவசாயிகள் இருக்கிறார்கள்.
களைகளை போக்க ரவுண்ட் அப் கெமிக்கல் அடிப்பது, காய் திரட்சியாக வர ரசாயன உரம் போடுவது, பூச்சி தாக்குதலை சமாளிக்க தினம் இருவேளை பூச்சி மருந்து தெளிப்பது என ஏலக்காய் செடிகளை ரசாயனத்தில்தான் குளிப்பாட்டுகிறார்கள்.
அது மட்டுமின்றி பச்சை நிறத்திற்காக பச்சைநிற நிறமிகளை சேர்த்துதான் உலர்ப்பானில் உலர வைக்கிறார்கள். விஷத்தன்மை கொண்ட இந்த கலர் பொடிகளையும் சேர்த்தேதான் நாம் உட்கொள்கிறோம். ஏலக்காயை பொறுத்தவரை அதை அப்படியேதான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். முழுக்க விஷத்தன்மையோடுதான் ஏலக்காய் சந்தை படுத்த படுகிறது.
இதற்கு மாற்றாக....,
ஆதிகுடிகள் விளைவிக்கும் ஏலக்காய்கள் இயற்கையாக விளைவிக்கப்படுகிறது. பார்க்க அது அழகு இருக்காது. விஷமும் இருக்காது. வனத்திற்குள் விளைவிக்கப்படும் ஏலத்தில் பெரிய அளவில் பூச்சி தாக்குதல் இருக்காது.
Must Read: காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
அப்படியே பூச்சிகள் தாக்கினாலும் கோமியத்தில் கோழி முட்டையை பதினைந்துநாள் ஊற வைத்து இயற்கையாக பூச்சிவிரட்டி தயார் செய்து தெளிக்கிறார்கள்.இராஜமலை பெட்டிமுடி ஆதி குடிகளிடம் இருந்தே எனது இயற்கை அங்காடிக்கான ஏலக்காயை வாங்கி வருகிறேன். ஆதி குடிகள் ஏலக்காயில் அழகிருக்காது. ஆனால் ஆரோக்கியம் இருக்கும். இயற்கை விளைபொருட்களே நோய்எதிர்ப்பு சக்தியை தரும்.
#Cardamom #HillCardamom #TribalCultivation #SpotReport
Comments