இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், கருப்பு கவுனி அரிசி விற்பனைக்கு…


இயற்கை வேளாண் விற்பனை சந்தை எனும் இந்த பக்கத்தில் இயற்கை விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் பற்றிய தகவல்கள் கட்டணமின்றி வெளியிடப்படும். தகவல்களை 7358314996 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். 

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றும் இலட்சியத்தை நோக்கி தீராத வேட்கையுடன் உழைப்பவர் திருச்செல்வன் அவரது முழுமையான  ஒருங்கிணைப்பில் வேப்பங்குளம் உழவர் உதவி மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. விவசாயிகளுக்காக உழைக்கும்  முயற்சிக்கு நாமும் கைகொடுப்போம்.

Must Read: சென்னையில் 14ம் தேதி பாரம்பர்ய மருத்துவ பயிற்சி…

சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் உழவர் உதவி மையம் அதன் மாத செலவான 18000 ரூபாய்க்கான வருவாயை ஈட்டும்போது அரசால் விரிவாக்கம் செய்யப்படும் வாய்ப்பைப் பெறும். கல்லல் அருகிலுள்ள இயற்கை முறையில் விவசாய  தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட  மாம்பழங்கள் விற்பனைக்கு உள்ளன..

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு

அல்போன்சா மாம்பழம் - 1 கிலோ - 150 ரூபாய் ( கூரியர் செலவு உட்பட). பெரிய நெல்லிக்காய் - 1 கிலோ - 70 ரூபாய் ( கூரியர் செலவு உட்பட). சப்பட்டை, இமாம் பசந்த், சப்போட்டா போன்றவையும் உள்ளன.

செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பிரச்சனை பெரிதாகும் நிலையில்,  இயற்கையாக பழுத்த பழங்களை நேரடியாக வீட்டிற்கு வரவைத்து உண்ணும் வாய்ப்பு.. குழந்தைகளுக்கு உடல்நலத்தைப் பாதுகாக்கும் உணவு முறைகளைப் பின்பற்ற இது உதவும்.வேப்பங்குளம் உழவர் உதவி மையம் மூலம் இயன்ற அளவு ஆர்டர் செய்ய வேண்டுகிறோம். தரம் திருப்தியாக இருந்தால் மட்டும் பணம் அனுப்பினால் போதுமானது. கூகுள் பே;  9840374266, இணையதளம்; fafaco.in

தங்கசம்பா அரிசி அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு 

பாரம்பரிய அரிசிகளில் மிகவும் சன்னமான வெள்ளை நிற அரிசி.சோறு நன்றாக ருசியாக இருக்கும்...தொடர்புக்கு  9884439977 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு முழுவதும் பார்சல் சர்வீஸ் மூலம் டெலிவரி செய்யப்படும். இப்போதைய இருப்பு தீர்ந்து விட்டதால் அடுத்தவாரம் முதல் தங்கசம்பா அரிசி விற்பனைக்கு கிடைக்கும். 

கருப்பு கவனி அரிசி விற்பனைக்கு 

இயற்கை முறையில் வயலில் விளைவிக்கப்பட்டு கை குத்தல் முறையில் தோலுரிக்கப்பட்ட கருப்பு கவனி அரிசி விற்பனைக்கு உள்ளது. ஒரு கிலோ விலை: 150 ரூபாய். குறைந்தபட்சம் 10 கிலோ வாங்கவேண்டும்.

Must Read: ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கும்…இட்லி பாட்டிக்கு பரிசாக கிடைத்த வீடு!..

இயற்கை விவசாயி: பூபதி குமார் சாமிநாதன், சத்திரக்கட்டு வலசு, கொடுமுடி தாலுகா, ஈரோடு மாவட்டம். தொடர்பு கொள்ள: +916377053472

சுத்தமான மலைத்தேன் விற்பனைக்கு 

மலைத்தேனுடன் கொம்புத்தேன் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மலைத்தேன் மற்றும் கொம்புத்தேன் தேன் அடையுடனும் கிடைக்கும். இந்தியா முழுவதும் பார்சல் செய்யப்படும். வாட்ஸ் ஆப்பில் தொடர் கொள்ளவும்; 9952290896 ,  8838102809 .மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இயற்கை அங்காடிகளுக்கு விலை அனுசரித்து தரபடும்.

#OrganicAgriProducts  #OrganicSandai  #OrganicProducts  #BuyOrganicAgriProducts

 



 

 

 


Comments


View More

Leave a Comments