பாரம்பரிய சித்த மருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... நெகிழும் மூத்த பத்திரிகையாளர்கள்!
முகநூலில் கடந்த சில நாட்களாக ஒரு சித்த மருத்துவர் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் பாஸ்கரன். அவரது சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை குறித்து ஆஹோ ஓஹோவென பேசிக் கொள்கிறார்கள்.
“அற்புதமான சித்த மருத்துவர் பாஸ்கரன். டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விட்ட சர்க்கரை நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்து நோயிலிருந்து மீட்டெடுத்துக் கொடுத்துள்ளார். சர்க்கரை குறைபாடு, சொரியாசிஸ் உட்பட பல்வேறு தோல் நோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், மூட்டுவலி நோய்கள், ஒற்றைத்தலைவலி, புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சையளித்து, குணப்படுத்தி வருகிறார்” என பாராட்டுகிறார் மூத்த ஊடகவியலாளரான ஜி கௌதம். https://rb.gy/wevk1
Must Read: தாய்பாலுக்கு மாறாக வேறொன்றை முயற்சிப்பது நல்லதல்ல...
“மருத்துவர் பாஸ்கரன் இளைஞர். மிகவும் சிநேகபூர்வமானவர். மிக இனிமையாகப் பேசக் கூடியவர். பதினென் சித்தர்களின் மரபில் வந்தவர். நவீன முறையிலும் படித்துப் பட்டம் வாங்கியவர். இன்னொரு முக்கியமான விஷயம். நம் பாரம்பரிய வைத்திய முறைகளை ஐந்து ஆண்டுகளில் கற்றுக் கொள்வது சாத்தியம் இல்லை.
பத்து வயதிலிருந்தே தொடங்கி இருபது ஆண்டுகள் ஒரு குருவுடன் தங்கிக் கற்றுக் கொள்ள வேண்டியது. பாஸ்கரனின் மூதாதையர் அனைவருமே பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவர்கள். அதனால்தான் பாஸ்கரனுக்கு நாடியில் கை வைத்ததுமே நோயாளியின் சரீர ஜாதகம் தெரிந்து விடுகிறது. சித்த மருத்துவர் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்துகிறார் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா. https://shorturl.at/coGK8
“மொத்தம் எட்டு பேர் சென்றிருந்தோம். யாருமே எங்களுக்கு என்ன பிரச்னை என்று அவரிடம் வாய் திறந்து சொல்லவில்லை. யாரையுமே அவருக்கு முன்பே தெரியவும் தெரியாது. ஆண்களுக்கு வலது கை மணிக்கட்டிலும், பெண்களுக்கு இடது கை மணிக்கட்டிலும் சில நொடிகள் நாடி பிடித்துப் பார்த்தே என்ன பிரச்னை என்று மிகத் துல்லியமாகச் சொன்னார் மருத்துவர் பாஸ்கரன். நண்பரொருவருக்கு சிறு வயது முதல் கழுத்து வலி. அதையும் கூடச் சரியாகச் சொன்னார் மருத்துவர். இதேதான் மற்றவர்களுக்கும். ஆச்சரியப்பட்டுப் போனோம்” எனக் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ‘மாயவரத்தான்’ ரமேஷ்குமார். https://shorturl.at/aloSV
“வந்த நோயை மட்டுமல்ல, வரப்போகும் நோய்கள் குறித்தும் எச்சரித்து, அவற்றை விரட்டும் சிகிச்சைகளையும் தருவது டாக்டர் பாஸ்கரனின் பெருங்கருணை. வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி பரம்பரையில் முற்றும் அறிந்த மருத்துவ முனிவர்போல் வந்திருக்கும் டாக்டர் பாஸ்கரன், வாடி நிற்கும் நோயாளிகளின் நாடி பிடித்து நலம் எனும் வரம் தரக் காத்திருக்கிறார். நாடிச்சென்று அவரை சந்திக்க வேண்டியது அவரவர் கடமை” என பாராட்டி மகிழ்கிறார் மூத்த பத்திரிகையாளரான எம்.பி.உதயசூரியன். https://rb.gy/cfft3
Must Read: யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…
மருத்துவர் பாஸ்கரன் குறித்து கேள்விப்படும் செய்திகள் பிரமிப்புக்குரியதாகவே இருக்கின்றன. பழனியில் இருக்கும் மூலவர் முருகனை பிரதிருஷ்டை செய்த சித்தர் போகரின் குருவானவர் ஶ்ரீ புற்றுமகரிஷி எனப்படும் ஶ்ரீ காளங்கிநாதர். அவர்தான் வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிருஷ்டை செய்தவர்.
அவரது குருபரம்பரையில் 47-வது தலைமுறை சித்த மருத்துவர் பாஸ்கரன். தனது நான்காவது வயதில் இருந்தே நாடி பிடித்து நோயறியும் பயிற்சியை எடுத்துக் கொண்டவர். சித்தமருத்துவத்தில் B.S.M.S. பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். மத்திய அரசின் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
இத்தனை சிறப்புக்களை கொண்டிருக்கும் மருத்துவர் பாஸ்கரன் நாளை 6.8.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருகிறார். நலம்நாடிகள் அவரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய சிகிச்சை பெறலாம்.
நோய் நொடிகளால் அவதிப்படுபவர்கள், நோய்கள் வருமுன்பே உடலைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி மருத்துவரைச் சந்திக்க விரும்பும் நேரத்தை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவுக்கு : https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA
#sidhhamedicine #sidhhadrbaskaran #sidhhamedicinechennai
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments