ஆன்றோர்களின் பார்வையில் சிறப்பாக முன்மொழியப்பட்ட புத்தகங்கள்


வைத்தியம், பாரம்பரிய இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த எனது இரண்டு நூல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை முறையே உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் காக்கைக்கூடு பதிப்பகத்தார் பதிப்பித்து வெளியிட்டனர். 

இந்நிலையில் எங்கள் பகுதியில் இயற்கை சார்ந்து செயல்படும் அத்திக்குழு என்ற அமைப்பு நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். வைத்தியம், பாரம்பரிய இயற்கை மருத்துவம் உள்ளிட்ட இரண்டு புத்தகங்களின் சிறப்பு குறித்து கவிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்களான திரு. எழிலரசு, திரு. தமிழ்மணவாளன், திரு.அமிர்தம் சூர்யா மற்றும் யோகா ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி உள்ளிட்டோர்  பேசினர். 

Must Watch: #shorts பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்யும் பொடுதலை கீரை.

ஆன்றோர்களின் பார்வையில் எனது புத்தகங்கள் சிறப்பாக முன்மொழியப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இவர்கள் அனைவரையும் பேசுவதற்கு ஏற்பாடு செய்த அத்திக்குழுவின் முன்னோடியும், மரபு விதைகளை மீட்டெடுத்து வருபவருமான திரு. வானவன் அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.  இந்நிகழ்வில் பாவையர் மலர் மாத இதழின் ஆசிரியர் திருமதி வான்மதி, மாடித்தோட்ட ஆர்வலர் திரு.ஜம்புலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.

ம்ரியபெல்சின் எழுதிய புத்தகம்

நிகழ்வுக்கு சித்த மருத்துவ மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வுபெற்றவரும், வர்மம் - மலர் மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றி வருபவருமான திரு.ஶ்ரீதரன் அவர்கள் தலைமை தாங்கினார். அவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அத்துடன் விழாவை ஏற்பாடு செய்த அத்திக்குழுவின் தலைவர் சுப்பிரமணியன் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். 

இந்நிகழ்வின்போது அத்திக்குழுவைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதாவது தருமபுரியில் பசுமை ஆசிரியர் விருதுபெற்ற பேராசிரியர் திரு சக்திவேல் அவர்களுக்கும், நம்மாழ்வார் விருதுபெற்ற அத்திக்குழு பொருளாளர் கமல் அவர்களுக்கும் பாராட்டுவிழா நடத்தப்பட்டதில் கூடுதல் மகிழ்ச்சி. 

Must Read: மக்கள் நலச்சந்தை வாரச்சந்தை இனி புதன்கிழமை நடைபெறும்…

இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட மூலிகைப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர், பழக்கலவை மற்றும் நவதானிய சுண்டல் வழங்கப்பட்டது. இந்தச் செயல் இயற்கை சார்ந்த ஒரு குழு என்பதை எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்தது. 

பனைமர விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவது, பாரம்பரிய காய்கறி விதைகளை பரவலாக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்துவரும் அத்திக்குழு வடசென்னை பகுதியில் அதிலும் குறிப்பாக மாத்தூர், மணலி, மாதவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இரு நூல்களும் தேவைப்படுவோர் 9551486617.என்ற மொபைல் எண்ணில் அழைத்து விவரங்களைப் பெறலாம்.

-எம்.மரியபெல்சின்

#BooksAboutHerbals  #TamilMedicineBooks #PattiVaithiyam 


Comments


View More

Leave a Comments