சென்னையில் வரும் 27-ம் தேதி .மாடித்தோட்ட செயல்முறைபயிற்சி


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

உணவுத்திருவிழாக்கள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

Must Read: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

மாடித்தோட்ட செயல்முறைபயிற்சி

சென்னையில்.நீண்ட நாட்களுக்குப்பிறகு,தில்லியம் குழுவினர் மாடித்தோட்ட செயல்முறைபயிற்சி கொடுக்கின்றனர். விருப்பம் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் ப்ங்கேற்கலாம்.

விதை முதல் விளைச்சல் வரையிலான ஓர் அனுபவ பகிர்வு & பயிற்சியாக இது இருக்கும்.இந்த பயிற்சிக்குப் பின்னர், நஞ்சில்லா காய்கறி & கீரைகளை நமது மாடியிலேயே பயிரிட்டு உண்போம்.

சென்னையில் மாடித்தோட்டப் பயிற்சி

பயிற்சியின்போது 

ஏன் வேண்டும் மாடித்தோட்டம் ..?

சமையல் கழிவுகள் மூலம் மட்கு எரு தயாரிப்பு.

மண்கலவை செயல்முறை விளக்கம்.

மாடியில் தொட்டிகளின் எடை தாங்குமா..? மற்றும் பாதுகாப்பு.

விதைத்தேர்வு & விதை நேர்த்தி.

காய்கறி , கீரை & மூலிகைகள் பயிரிடும் நுட்பங்கள்.

இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு,

பூச்சி கட்டுப்பாடு.

ஆகிய மேற்கண்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படும். 

Must Read: துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…

எனவே, வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.30 முதல் மதியம் 04.00 மணி வரை பயிற்சியில் பங்கேற்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியம். பயிற்சி கட்டணமாக  ₹500 வசூலிக்கப்படும். இந்த பயிற்சி கட்டணத்தில் எழுதுபொருட்கள், தேநீர், மதிய உணவு உள்பட அனைத்தும் வழங்கப்படும். பயிற்சி அளிப்பவர் - வானகம் செந்தில்குமரன்.கல்லூரி & பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். பயிற்சியின் முடிவில் நாட்டு விதைகள் வழங்கப்படும் முன்பதிவுக்கு மோ.அறிவழகன் என்பவரை 9500038385 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

(முகப்புபடம்; நன்றி; வானகம் பயிற்சி மையம்)

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtChennai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 

 


Comments


View More

Leave a Comments