தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். 

Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

மரபு தின்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி

செஞ்சோலை நடத்தும் மரபு தின்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 26ம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம்  01.00 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சியில், தேன்குழல்(கரும்பு சர்க்கரை ஜிலேபி), கரும்பு சர்க்கரை லட்டு தூயமல்லி கை-முறுக்கு ஆகியவை செய்முறை மூலம் கற்றுத்தரப்படும். 

மரபு வழி திண்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி

15 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி நன்கொடை ரூ.300. (மதிய உணவு & ஏற்பபாடு செலவுகளை பகிர்ந்து கொள்ள) மட்டும் செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்க ஆவூர்.முத்து 9600873444, செந்தில் குமரன் 9566665654 ஆகியோரை  மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்  :

Also Read: உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் மஞ்சள் பூசணியை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்...

செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பயிற்சிப் பண்ணை,கலங்கல் சாலை,சூலூர்,கோவை.என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. 

இயற்கை விவசாய பயிற்சி 

வானகம் மற்றும் வள்ளுவம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும் 1நாள்  இயற்கை விவசாய பயிற்சி வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கீழ்கண்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். 

1. ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை 

2 . ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு 

இயற்கை வழி வேளாண்மை ஒரு நாள் பயிற்சி

 

3 . இயற்கை இடுபொருள் தயாரித்தல் மற்றும் பயன்பாடு .

காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கு : 500/- ரூபாய் மட்டும் பங்களிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.  வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் ,  குளத்துப்பட்டி ,  நிலக்கோட்டை ,  திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்ய 9566667708 / 8610457700 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

#AgriEvents #OrganicTraining #NaturalLife


Comments


View More

Leave a Comments