சித்தர்கள் குறிப்பிட்ட காயகற்ப மூலிகை எது தெரியுமா?
வாதவள்ளி என்றும் ஆகாய ராஜன் என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு முடக்கு வாதம் மூட்டு வலி தசைப்பிடிப்பு ஆகிய அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.
சித்தர்களால் மூலிகை மலை எனக் கொண்டாடப்படுகின்ற கொல்லிமலையின் மிகச் சிறப்பான அடையாளமானது இக் கிழங்கு. அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் அனைவரும் மூலிகை சூப் அல்லது மூட்டுவலி சூப் என்ற பெயரில் இந்த சூப்பை நிச்சயமாக அருந்தி இருப்பர். #பெயர்க்காரணம் பார்ப்பதற்கு மயிர்கள் அடர்ந்த ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதாலும் , #முடவன்_ஆட்டும் _கால், #முடக்கு_நீக்கும் கால் என்ற பெயர்களே மருவி இவ்வாறு முடவாட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படுகிறது.
இக் கிழங்குகள் மண்ணில் வளர்வதில்லை. இவற்றிற்கு வேர்களும் கிடையாது. இக் கிழங்கு கடல் மட்டத்திலிருந்து 3800 அடிகளுக்கு மேல் மலைகளின் பாறைகளில் ஒட்டி வளரும் ஒருவகையான பெரணித் தாவரமாகும். இவை அந்தப் பாறைகளிலுள்ள செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக சிலிகா மற்றும் பிற தாது உப்புக்களையும் தனது தோலில் அமைந்துள்ள தூவி போன்ற அமைப்புகளால் உறிஞ்சி வளர்கிறது.
Must Read: இயற்கைசார்ந்த வாழ்வியலுக்கான பயிற்சி முகாம் அறிவிப்புகள்
சிலிகா அயனி, கற்பமருந்து என்பதை நாம் அறிவோம். அதனால்தான் காலங்கிநாதர் ,போகர், வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை #காயகற்ப_மூலிகை எனக் குறிப்பிடுகிறார்கள். இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தமான 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்றும் குறிப்பிடுகிறார்கள் .
இவ்வளவு அற்புத ஆற்றலுடைய இக்கிழங்குமுழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வு மட்டுமல்லாது மேலும் பல எண்ணற்ற பயன்களைத் தன்னகத்தே கொண்டது.
1. தாய்ப்பாலுக்கு நிகரான லாரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலிக்கு மிகச்சிறந்த மருந்து.
3. கால்சியம் குறை பாட்டுக்கு குறிப்பாக குழந்தைப் பேறு முடிந்ததும் உடலில் உருவாகும் கால்சியம் சத்து பற்றாக்குறைக்கு முக்கிய நிவாரணி.
4. இவற்றில் உள்ள தாது உப்புகளான சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் ஆகிய சத்துக்கள் இயல்பாகவே விந்துவை அடர்த்தியாக மாற்றும். இதனால் இனிய தாம்பத்தியமும் சிறந்த குழந்தைப்பேறும் அமையப் பெறும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.
5. இக் கிழங்குகளால் மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் மூலமாக உடல் புத்துணர்ச்சி அடையும்.
சூப்_வைக்கும்_எளிய_முறை ( நான்கு கப்ஸ் சூப்)
மேல் தோல் நீக்கி சுத்தப்படுத்திய கிழங்கு 100 கிராம், மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் 6, பூண்டு 6 பல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி சிறு துண்டு இவற்றை ஒன்றிரண்டாக கல் உரலில் சிதைத்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியிலிட்டு அரைத்துக் கொள்ளவும். உடன் தேவைக்கேற்ப உப்பு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்த பிறகு 20 நிமிடங்கள் சிறு தீயில் இருக்கட்டும். கறிவேப்பிலை போட்டு இறக்கவும். வடிகட்டி கொத்தமல்லி இலைகளைத் தூவி பறிமாறவும். ( விரும்பினால் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது வெண்ணை சேர்த்தும் குடிக்கலாம்.)
கிழங்கைத் தவிர்த்து மேற்குறிப்பிட்ட மற்றப் பொருட்களை விளக்கெண்ணெயில் வறுத்து அரைத்து சூப் வைக்கும் போது மேலும் சுவை கூடும். இதனைக் குறைந்தது 48 நாட்களாவது குடித்துவந்தால் கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசைப் பிறழ்ச்சி ஆகியன நீங்குவதைக் காணலாம்.
மேலும் குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்புகள் நீங்கும். மேற்குறிப்பிட்ட வெங்காயம் பூண்டு இஞ்சி மிளகு சீரகம் அனைத்தையும் லேசாக நல்லெண்ணெய் , விளக்கெண்ணெய் அல்லது வெண்ணை மட்டுமே உபயோகித்து வதக்கி, உடன் கிழங்கையும் சிறுவில்லைகள் ஆக்கி வதக்கி சேர்த்து அரைத்து துவையலாகவும் சாப்பிடலாம். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கடலை எண்ணெய் மற்ற பிற எண்ணெய்களைச் சேர்க்க வேண்டாம்.
Must Read: உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?
குறிப்பு மூட்டில் நீர் கோர்த்து அதனால் வலியும் வீக்கமும் உள்ளவர்கள், கிழங்கின் மேல் தோலை சுத்தப்படுத்திய பிறகு அதைத் தூக்கி எறிந்து விடாமல் அந்தத் தோலுடன் ஒரு கைப்பிடி முடக்கற்றான் இலை அல்லது ஒரு ஸ்பூன் முடக்கற்றான் பவுடர் சேர்த்து அரைத்து முட்டியைச் சுற்றிப் பற்று போல போட்டு நன்கு உலர்ந்ததும் கழுவி வர வலியும் வீக்கமும் குறைவதைக் காணலாம். வீடியோ லிங்க் https://youtu.be/MmcLFL4nLbk
கட்டுரை, படங்கள் நன்றி; ஆரண்யா பசுமை குடில்
#JointPain #JointPainTreatment #Palsy #Rheumatism #MutavattuKilankku #HerbalSoup
#முடவாட்டுக்கால்கிழங்கு #கொல்லிமலை #மூட்டுவலி_நிவாரணி
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments