சத்துமிக்க இயற்கை அவல் எங்கே கிடைக்கும் தெரியுமா?


அவல் என்பது மிகவும் எளிதான ஆனால், மிகவும் சத்து வாய்ந்த உணவு. இப்போதைய வாழ்க்கை சூழலில் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் நாம் அவல் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. கொரோனா தொற்று போன்றவற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அவல் சிறப்பான உணவு. 

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே கோட்டப்பூண்டி, அறல் கழனி, உழவர் வ.சதிஸ்.,B.E (Civil) இயற்கையான முறையில் விளைவித்த நெல்லில் அவல் தயாரித்து வருகிறார். அவரிடம் இருந்து விருப்பம் இருப்போர் அவல் வாங்கலாம். வ.சதீஸ் எழுதிய அனுபவ பதிவை இங்கே பகிர்வதிலும் ஆரோக்கியசுவை இணையதளம் பெருமை கொள்கிறது. 

இதையும் படியுங்கள்: தர்ப்பை, துத்தியின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்


அவல் தயாரிப்பது துரிதமானது, அதே போல் அதன் ஆயுட்காலமும் துரிதமானது. 5 வருசமா அவல் செய்து விற்க வேண்டும் என என்னுடைய ஆசை ஆனால் இப்போ தான் அதுக்கு சரியான நேரம் கிடைத்திருக்கிறது. அவல் அரைக்க மில்லில் நெல் கொண்டு போய் இறக்கிவிட்டோம். 

சத்துமிக்க இயற்கை அவல் எங்கே கிடைக்கும் தெரியுமா?

2.5-3 மாசம் தான் அவல் கசப்பாகாம நன்றாக இருக்கும். அப்போ  நாம செய்த அவல் ஒரு மாசத்துக்குள்ள விற்கவேண்டும். சரி தேவையானப்போ செஞ்சுக்கலாம்னு பார்த்தா  அவல் அரைக்கும் இயந்திரம் 60 கி.மீ அப்பால் இருக்கிறது. எனவே குறைந்த பட்சம் 3 மூட்டையாவது எடுத்துகிட்டு போனால் போக்குவரத்து கூலியாச்சும் கட்டும். 

முன்பதிவு செய்யுங்கள் 

இவ்வளோ கடினம் இருந்ததால் தான்  இவ்வளவு நாட்களாக அவல் செய்ய இயலாமல் போனது. இப்பொழுது அனைத்து சவால்களையும் ஏற்று நமது அறல் கழனியில் நஞ்சில்லாமல் விளைந்த அறுபதாம் குறுவை நெல்லை அவலாக மாற்ற அரைவை மில்லுக்கு அனுப்பியுள்ளோம். அடுத்த வாரம் 150 கி அவல் கிடைக்கும் தேவைபடும் அனைத்து வாடிக்கையாளர்களும் முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்.

அவலில் உள்ள சத்துகள் 

சிவப்பு அரிசியில் இருந்து கிடைக்கும் சிவப்பு அவல் மிகவும் சத்து மிக்கது. இரும்பு சத்து, மக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துகளுடன், நார்சத்து, வைட்டமின் பி ஆகியவை மிகுதியாக உள்ளன. 

இதையும் படியுங்கள்: கற்றாழை தரும் குளுமையை தவற விடாதீர்கள்

அவல் சாப்பிடுவதால் இதயத்தை ஆரோக்கியம் மேம்படும், நம் உடல் ரத்த த்தில் இருக்கும் கொழுப்பு அளவை கட்டுக்குள் வைக்கும், சீராக்கும். முக்கியமாக நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும், உடலை சமநிலைப்படுத்தி உறுதிப்படுத்தும். வாய்ப்புண்ணை அகற்றும், சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகும். 

அவலில் என்ன செய்யலாம்?

தினமும் காலையில் பாலில் போட்டு உண்ணலாம், சிகப்பு அரிசிகளை பட்டைதீட்டாமல் சாப்பிடுவது கடினம் ஆனால் சிகப்பு அரிசி அவலை எளிதாக சாப்பிடலாம், உப்புமா செய்யலாம், எண்ணெய்யில்லாமல் , அடுப்பில்லாமல் சமைக்கலாம், நார்ச்சத்து, புரதசத்து மிக்கது, லெமன் அவல், தக்காளி அவல், பிரியானி அவல் என பல வெரைட்டி சாதங்கள் செய்யலாம்,உடனடி சமையலுக்கு ஏற்றது,அவலில் செய்த இட்லி பஞ்சு போன்று இருக்கும்

Bread crumbs மாற்றாக அவல் தூள் பயண்படுத்தலாம், அவலை பயண்படுத்தி instant cake செய்யலாம் (zero oil) இப்படி பல நன்மைகள் அவல் மூலம் இருக்கிறது , சமையலும் சுலபமாக முடியும், நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் தொடர்ச்சியாக அவல் உற்பத்தி செய்ய இயலும். தேவைபடுவோர் முன்பதிவு செய்யவும்,

-உழவர் வ.சதிஸ்.,B.E (Civil),

அறல் கழனி, கோட்டப்பூண்டி,செஞ்சி

மொபைல் எண்;8940462759

#AvalFood #FiberFoodAval #BrownRiceAval #BenefitsOfAval  #HealthyFoodOfAval

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 


Comments


View More

Leave a Comments