ஆரோக்கியமான காலை உணவு குறித்து சைலேந்திரபாபுஐபிஎஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
தமிழகத்தின் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், தன்னம்பிக்கை பேச்சாளர், உடற்பயிற்சியாளர், சைக்கிளிங் செய்வதில் ஆர்வம் உள்ளவர். அரசு பள்ளியில் படித்து படிப்படியாக முன்னேறி மாநிலத்தின் காவல்துறை தலைமைபொறுப்புக்கு வந்திருக்கும் அவரை கண்டு வியக்காதவர்கள் இல்லை.
சைலேந்திரபாபுவின் வயது 59. ஆனால், அவரைப் பார்த்தால் 25 வயது இளைஞர் போலவே தோற்றமளிக்கிறார். தன்னுடைய உடலை தொடர்ந்து கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்; வாய்ப்புண் வந்தால் இதை மட்டும் செய்யுங்க போதும்
தமது கட்டுக்கோப்பான உடலுக்கு தாம் செய்யும் பயிற்சிகள் குறித்தும் அவர் வீடியோகளை வெளியிட்டுள்ளார். அதனை கண்டு எண்ணற்ற இளைஞர்கள் கட்டுக்கோப்பான உடலை பராமரித்து வருகின்றனர்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு குறித்தும் சைலேந்திரபாபு பல அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவருடைய முகநூல் பக்கத்தில் அவர் உண்ணும் காலை உணவு குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ஆரோக்கிமான காலை உணவு உண்பது குறித்து கூறியிருக்கிறார். சைலேந்திரபாபு அவர்கள் தமது வீடியோவில், “இன்னைக்கு புது விதமான சிற்றுண்டி ஒன்றை அறிமுகம் செய்யப்போகின்றேன். இது புதுமையாக இருக்கும். இதை கூழ் என்று அழைக்கலாம் கார்போ ஹைட்ரேட். நிறைந்தது. அதாவது மாவு சத்து நிறைந்த உணவு. இதை தயாரிக்க கோதுமை, சோளம், மக்காசோளம் கம்பு ராகி, தினை குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இது தவிர நமது உடல் நலத்துக்குத் தேவையான புரத சத்து கிடைப்பதற்கு சோயாபீன்ஸ், உளுந்து, பயறு, வேர்கடலை கொண்டக்கடலை, கடலை வகைகளையும் வறுத்துப் பொடி செய்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்; கிரில்ட் உணவை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?
இரண்டு பொடியையும் கலந்து மோர் ஊற்றினால் கூழ் தயாராகி விடும். ரொம்ப சிறப்பான ருசியுடன் இருக்கிறது. இயற்கையான உணவு என்பதால் எல்லோரும் தயங்காமல் சாப்பிடலாம். . உப்பு தேவையான அளவு போட்டுக்கலாம். ஊறுகாய் குறைவாக தொட்டுக் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள் போன்ற கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவோர் காலையில் இந்த கூழுடன் சேர்த்து மூன்று முட்டை வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.
இப்படி ஆறுமாதங்கள் சாப்பிட்டால் நம் உடலுக்கு தெம்பு, உடல் ஆரோக்கியமாக இருக்கும் தேவையற்ற வெயிட் குறையலாம், இந்த கூழை குடித்து முடித்த உடன் பசிப்பது போல இருக்கும். அதற்காக வேறு ஏதாவது ஒன்றை சாப்பிடக் கூடாது. மதியம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி இருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும், படிப்படியாக உடல் எடை குறையும். ஆரோக்கியமாக இருக்கலாம்,” என்று கூறியிருக்கிறார். சைலேந்திரபாபுவின் வீடியோ இணைப்பை ஆரோக்கிய சுவை யூடியூப் தளத்தில் பார்க்க; https://youtu.be/7Vz_IzrBEzs என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
-பா.கனீஸ்வரி
வீடியோ நன்றி; திரு.சைலேந்திரபாபுஐபிஎஸ் முகநூல் பதிவு
#SylendraBabuIPS #FitnesOfSylendraBabuIPS #SylendraBabuIPSFitnesSecret
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Comments
View More