வாய்ப்புண் வந்தால் இதை மட்டும் செய்யுங்க போதும்


வாய்ப்புண், வயித்துப்புண், குடல்புண் என்று அவதிப்படும் பலபேரை பார்த்திருப்போம். ஏன் இதைப்படிக்கும் உங்களில் பலருக்கும் இதே பிரச்சினை வந்து அவதிப்பட்டு எப்படியோ  சமாளித்திருப்பீர்கள். வாய்ப்புண், வயிற்றுப் புண், குடல் புண் ஏன் வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் 

வாய்புண் வர காரணம்

சரிவிகித உணவு சாப்பிடாதவர்களுக்கு அதாவது குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வீட்டு உணவு சாப்பிடாமல் , அடிக்கடி வெவ்வேறு உணவகங்களில், சாப்பிடுபவர்களுக்கு இது போன்று வாய்ப்புண் வரலாம். வீட்டில் சாப்பிடாலும் கூட சரிவிகித உணவு சாப்பிடாதவர்களுக்கும் வாய்ப்புண் வரவாய்ப்புண்டு. சரிவிகித உணவு சாப்பிடாத பட்சத்தில் உடலில் சில குறைபாடுகளை ஏற்படுத்தும். 

மன அழுத்தமும் காரணம்

இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, பி12 போன்றவை குறைவதால், அதன் விளைவாக வாயில் புண் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த தன் வெளிப்பாடே வாய்ப்புண் வடிவத்தில் அறிகுறியாக நமக்குத் தெரியவரும். இது தவிர மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் வாய்புண் வரலாம். வாய்ப்புணை குணப்படுத்த முதலில் சரிவிகித உணவு, சத்தான உணவை உட்கொள்வது அவசியம். மன அழுத்தம் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் முக்கியம். 

இதையும் படியுங்கள்; ஸ்விக்கி அதிகாரி பதவி விலகலுக்கு என்ன காரணம்?


மாசிக்காய்

வாய்ப்புண் வந்துவிட்டால் கீழ் குறிப்பிட்ட சில எளிய வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.  இவற்றுக்கெல்லாம் எவ்வளவோ எளிய சிகிச்சைகள் உள்ளன. முதலில் சொல்ல வேண்டுமென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மாசிக்காயின் மகிமைக்கு அளவில்லை. முழு மாசிக்காயும் தேவையில்லை. அதை உடைத்து மிளகு அளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பாக்கை மென்று சாப்பிடுவதுபோல் மெதுவாக மெல்லலாம். உமிழ்நீரை விழுங்க முடியாதவர்கள்  துப்பி விடலாம். 

   மணத்தக்காளி கீரை 

    வாய்ப்புண்ணுக்கு ஏற்ற மணத்தக்காளி கீரை

அதேபோல் தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்கலாம். மணத்தக்காளி கீரையையும் வெறுமனே  மென்று  சாப்பிடலாம். இந்த கீரையை சமைத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளியின் பழத்தையும் சாப்பிடலாம். கொஞ்சம் இனிப்புச்சுவையுடன் இருக்கும். 

திராட்சை 

திராட்சைப்பழத்தை வெறுமனே சாப்பிடலாம். இல்லையென்றால் ஜூஸாக்கியும்  சாப்பிடலாம். வெள்ளை நிறத்தில்  உள்ள கல்யாண பூசணிக்காயை ஜூஸாக்கி அதனுடன் வெல்லம் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து காலையில்  வெறும் வயிற்றில்  குடித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்; கிரில்ட் உணவை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? 


நெல்லிக்காய் 

இவை தவிர திப்பிலியையும், நெல்லிக்காய் தூளையும் சம அளவு எடுத்து தேனில் குழப்பி நாக்கில் வைத்து வாய் முழுவதும் படும்படி செய்தால் வாய்ப்புண் சரியாகும். மாங்கொட்டைப்பருப்பை மணத்தக்காளி சாறுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக காய வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு உருண்டையை எடுத்து வாயில் போட்டு மோர் குடித்து வந்தால் வாய்ப்புண், வயித்துப்புண் குணமாகும்.

  - எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின்  அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )

#FoodForMouthUlcer #MouthUlcer #HelthTipsForMouthUlcer 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 

 

 

 


Comments


View More

Leave a Comments