அடையாறு ஆனந்தபவனும் சீனிவாச ராஜாவும்… தொடக்கம் முதல் சர்ச்சை வரை!


தமிழ்நாட்டின் சைவ உணவு பாரம்பர்யத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது அடையாறு ஆனந்தபவன். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த திருப்பதி ராஜா என்பவரின் பிள்ளைகள்தான் இன்றைக்கு அடையாறு ஆனந்தபவன் உணவகத்தை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் திருப்பதி ராஜா.சிறுவயதில் பிழைப்புத் தேடி சென்னை, மும்பை என்று அலைந்தார். சென்னையில் ஒரு உணவகத்தில் இனிப்பு தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் மீண்டும் ராஜபாளையம் திரும்பி குரு ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக்கடையை தொடங்கினார். 

Must Read: உலக உணவு தினத்தில் ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்...

அப்போது அந்த இனிப்புக்கடையில் பள்ளிப்படிப்பு போக மீதி நேரம் அவரது பிள்ளைகள் உதவிக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் இன்றைக்கு அடையாறு ஆனந்தபவன் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கே.டி.சீனிவாச ராஜா

அப்போது அவர்கள் நிலத்தில் பயிரிட்டிருந்த விவசாயம் பொய்த்துப்போனது.எனவே பெரும் நஷ்டத்தை சந்தித்த திருப்பதி ராஜா, பிழைப்பதற்காக பெங்களூர் சென்றார். அங்கு கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி 1975-ம் ஆண்டு பெங்களூரில் ‘ சீனிவாசா ஸ்வீட்ஸ்’ என்ற சிறிய ஸ்வீட் கடையைத் திறந்தார். இன்றைக்கு அடையாறு ஆலமரம் போல அடையாறு ஆனந்தபவன் உலகம் முழுவதும் கிளைகளுடன் சைவ உணவக உலகில் கோலோச்சுகிறது. 

தமிழ்நாட்டில் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாங்கும் சக்தி அதிகரிப்பு பரவலாக அனைத்து துறை வணிகத்தையும் அதிகரித்தது எனலாம். அதிலும் குறிப்பாக உணவகங்களின் தேவை அதிகரித்தது. சரவண பவன் அப்போதுதான் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. 

சரவணபவனுக்கு மாற்றாக களம் இறங்கியது அடையாறு ஆனந்தபவன். எனினும் ஆரம்ப கட்டத்தில் இனிப்பு, கார வகைகள், போலி போன்ற இனிப்பு கார வகைகள் மட்டுமே விற்பனை செய்தது.  முதன் முதலில் அடையாறு பகுதியில் தொடங்கப்பட்ட ஆனந்தபவன் பெரும் வளர்ச்சியடைந்தது. இனிப்பு கடைகளாக ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட அடையாறு ஆனந்தபவன்  நாளடைவில் ஏ2பி என்ற உணவகத்தையும் தொடங்கியது. 

அடையாறு ஆனந்தபவன்

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்குகளில் சிக்கியதால் அந்த உணவகத்தின் பெயர் கெட தொடங்கியதுடன், பெரும் நஷ்டத்தையும் சந்தித்தது. சென்னையில் பெரும்பாலான சரவண பவன் உணவகங்கள் மூடப்பட்டன. சில உணவகங்கள் சிறிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த இடைவெளியில் அடையாறு ஆனந்தபவன் இனிப்பு கடைகள், உணவகங்கள் வளரத்தொடங்கின. 

அடையாறு ஆனந்தபவன் உரிமையாளரின் உழைப்பு என்பது முன்னேறத்துடிக்கும் பலருக்கும் ஒரு பாடமாகும். அந்த வகையில்தான் பல ஊடகங்களுக்கும் அதன் உரிமையாளர் கே.டி. சீனிவாசன் பேட்டி அளித்து வந்தார். 

பிரபல நடிகரும், இயக்குநருமான சித்ரா லஷ்மணன், தான் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் என்ற யுடியூப் சேனலுக்காக அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாச ராஜாவிடம் பேட்டி எடுத்தார்.  

அப்போது அவரிடம், வெஜ் ஹோட்டல்களை பிராமணர்கள் வசம் தான் இருந்தது என்றும் அப்புறம் எப்படி நீங்கள் இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீனிவாச ராஜா, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று மாற்றிக்காட்டியவர் தந்தை பெரியார். அவர் தான் இதற்கு காரணம் என்றும், காலம் மாறியது என்றும் அரசு ஆதரவு கிடைத்ததாகவும் பேசியுள்ளார். 

Must Read: சாப்பிட்ட உணவு தரம் குறைவா? வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்…

சீனிவாச ராஜாவின் பேட்டியில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தபோதிலும் இந்த ஒரு விஷயம்தான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமூக வலைதளங்களில் சீனிவாச ராஜாவுக்கு எதிராக ஒரு பிரிவினர் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்திருக்கின்றனர். 

முதன்முதலில் இப்படி பதிவிட்டவர் மோதிலால் என்பவர்தான். மோதிலால் என்ற ஐடியில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில், பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை இவ்வளவு மருத்துவமனைகளைக்கு அவசியமே இல்லாமல் இருந்தது, இப்போது எவ்வளவு ஹோட்டல்கள் உள்ளதோ அதே அளவு மருத்துவமனைகளும் உருவாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். #BoyCott A2B என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. 

இவரது இந்த பதிவுக்கு பெரியாரிஸ்ட்டுகள், பெரியார் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். #wesupportA2B  என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.இதற்கிடையே  திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட  எக்ஸ் பதிவில் ஏ2பி உரிமையாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து உள்ளார். "உண்மையை பேசியதற்கு நன்றி." என கனிமொழி கூறியுள்ளார்.  #WillEatAtA2B என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார். அவரது  ஹேஷ்டேக்கை பலரும் பகிர்ந்துள்ளனர். 

இதற்கிடையே பிரபல அசைவ உணகமான சேலம் RR பிரியாணி கடை ஓனர் ஒரு பேட்டியில நான் ஆன்மீகத்தையும் பெரியாரையும் ஒன்றாக எடுத்துக் கொண்டவன் என்று சொல்லி இருக்கிறார். 

-ரமணி 

#A2BRestaurants #periyarist #foodpolitics #supportA2B

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments