#HealthAlert மாசுபட்ட காற்று மூளை கோளாறுகள் என்கிறது சமீபத்திய ஆய்வு…


அசுத்தமான காற்றை சுவாசிக்கும்போது பல நச்சுக் கூறுகளின் கலவை நுரையீரலில் இருந்து இரத்த ஓட்டம் வழியாக மூளைக்கு கொண்டு செல்லப்படலாம் - இது மூளைக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் பாதிப்புக்கு வழிவகுக்கக் கூடும் என்று தேசிய அறிவியல் அகாடமியின் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

Must Read: #6PointsForHealthy சளியை குணப்படுத்தும் மிளகு…

பார்கின்சன் நோய், அல்சைமர் நோய்  உட்பட பல நரம்பியல் கோளாறுகள் காற்று மாசுபாடு கணிசமாக தொடர்புடையது என்று அறியப்பட்டதாகும். சீனாவில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதற்கான நேரடி தொடர்பை கண்டுபிடித்துள்ளனர். இரத்த ஓட்டத்தின் மூலம் உள்ளிழுக்கப்படும் பல்வேறு நுண்ணிய துகள்கள்  மற்ற முக்கிய வளர்சிதை மாற்ற உறுப்புகளை விட மூளையில் நீண்ட காலம் இருக்கும்.

அசுத்த காற்றால் மூளை பாதிக்கப்படலாம்

எமோரி யுனிவர்சிட்டியின் ரோலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் கொலம்பியா யுனிவர்சிட்டியின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆகியவற்றில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.  

Must Read:ஒரு வேளைக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உன்னத தம்பதி..

மூளைக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மனித செரிப்ரோஸ்பைனல் திரவங்களில் பல்வேறு நுண்ணிய துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். "நுரையீரலில் இருந்து நேரடியாக மூக்கு வழியாக செல்வதை விட, எட்டு மடங்கு நுண்ணிய துகள்கள் நுரையீரலில் இருந்து பயணிப்பதன் மூலம் மூளையை சென்றடையக்கூடும் என்று தரவு தெரிவிக்கிறது  எனவே, தூய்மையான காற்று உள்ளபகுதிகளில் வசிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இயற்கையை சீரழிக்காமல் வாழ்வதும் மிகவும் முக்கியம். 

#HealthAlert  #BrainDisorders  #AirPollution

 


Comments


View More

Leave a Comments