உடல் நலத்துக்கு தேவையான சத்துகள் கொண்ட வாழை இலை, வாழைப்பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…
வாழைப்பூ
வாழைப்பூவைப்பத்தி எல்லோருக்கும் தெரியும். ஆனா எத்தனைபேருக்கு அந்த பூவை பறிச்சி சமைக்கத்தெரியும்? கிராமத்துல இருக்கற சிலபேருக்குக்கூட எப்பிடி? என்ன செய்யணும்னு தெரியல. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லோருக்கும் சொல்றேன். பூவை பறிச்சி அதுக்குள்ள கள்ளன்னு ஒண்ணு சொல்வாங்க. நீளமா இருக்கும். அதை எடுத்துட்டுதான் பயன்படுத்தணும். சில பொருட்கள்ல சிலது பயன்படாது. இதை தனித்தனியா எடுத்து பொடியா நறுக்கி மஞ்சள் கலந்த தண்ணியிலயோ, மோர் கலந்த தண்ணியிலயோ போட்டா நிறம் மாறாம இருக்கறதோட துவர்ப்புத்தன்மை அதிகமா ஆகாது.
Must Read: மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் தேவையா?
சரி இப்போ வாழைப்பூவோட பலன் பத்தி சொல்றேன். பொதுவா சர்க்கரை நோயாளிகளுக்கும், மூல வியாதி உள்ளவங்களுக்கும் ரொம்ப நல்ல மருந்து. வாழைப்பூவுல பொரியல், வடைனு செஞ்சி சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் நிக்குற காலத்துல வரக்கூடிய ‘மெனோபாஸ்’ சிலபேரை பாடாய்ப்படுத்தி எடுத்துடும். இதை சரிபண்ணணும்னா வாழைப்பூவை கசாயம் பண்ணி அதோட சோம்புன்னு சொல்ற பெருஞ்சீரகம், சீரகம் எல்லாத்தையும் நெய் விட்டு தாளிச்சி தினமும் சாப்பிட்டு வந்தா ஒரு வாரத்துல அந்த பிரச்சினை சரியாகும்.

ரத்தப்போக்கு நிக்குறதோட கருப்பையில வரக்கூடிய கோளாறுகள் சரியாகி கருப்பையும் சுருங்கிப்போயிரும். மூலம் உள்ளவங்க வாழைப்பூவை பொடிப்பொடியா நறுக்கி வேக வச்சி பாசிப்பருப்பு, நெய், சீரகம், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளிச்சி மத்தியான சாப்பாட்டோட சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். முக்கியமா ரத்தம் போறது நிக்குறதோட சதைமூலம் சுருங்கிரும்.
வாழை இலையின் மகத்துவம்
திருமணம் என்றில்லாமல் வீடுகளில் நடைபெறும் நல்லது, கெட்டது என அனைத்து விழாக்களிலும் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். ‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது.
இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருள்களாக இருக்கின்றன. நமது மூதாதயர் உணவு பரிமாற வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது அளவில் பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது.
இதனால் நமது உடலில் உள்ள செல்கள் சிதையாமல் இளமையுடன் இருக்க முடியும். வாழை இலையில் உணவு உண்பதன்மூலம் மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் பாலிபீனால், செல்களில் உள்ள டிஎன்.ஏ-வை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான உணவை வாழை இலையில் பரிமாறுவதால் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் உணவுடன் கலந்துவிடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதிலுள்ள குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பிறகும் வாழையிலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையைக் கொண்டு சுற்றி வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை எளிதில் வாடாது.
Must Read: இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்வியலின் அனுபவம்…
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்கள் முடி கருப்பாக இருக்கும். வாழை இலையில் பேக்கிங் செய்யப்படும் உணவுகள் கெடாமலும், மணமாகவும் இருக்கும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்கவைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி மற்றும் இலையில் இருந்து பெறப்படும் குளிர்ச்சித் தன்மை குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். சின்னம்மை, படுக்கைப் புண் வந்தால் வாழை இலையில் சிறிது தேனைத் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணம் கிடைக்கும். சோரியாசிஸ், தோல் நோய்கள், கொப்பளங்கள் வந்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைத்தால் சீக்கிரம் குணமாகும்.
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#BenefitsOfBananaFlower #BenefitsOfBananaLeaf #HealthyBananaFlower #EatWithBananaLeaf

Comments
View More