#BestCoffeeInChennai சென்னையில் அதிகாலை நான்கு மணி.. அருமையான காபி எங்கு கிடைக்கும் தெரியுமா?


நம் ஒவ்வொரு நாள் காலை பொழுதையும் சுறுசுறுப்பாக்குவது ஒரு நல்ல காபி அல்லது தேநீராக இருக்கிறது. சிலருக்கு கிரீன் தேநீர், சிலருக்கு அருகம்புல் சாறு, கற்றாழை சாறு என்று அவரவர் விருப்பத்தைப் பொருத்து சூடான பானமாகவோ, இயற்கையின் சத்துகளை தரும் பானமாகவோ அது இருக்கும். 

Must Read: வேகன் உணவுகள் தயாரிப்பதற்கு எஃப்எஸ்எஸ்ஐ-யின் புதிய விதிமுறைகள் வெளியீடு

ஆனால், மற்ற எல்லாவற்றையும் விட சூடான, சுவையான காபியுடன் தொடங்கும் காலை என்பது அந்த நாள் முழுவதையும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைக்கும். சென்னையில் காலை நேரத்தில் நல்லதொரு காபி கிடைக்கும் இடங்கள் நிறைய உள்ளன. அவற்றில் குறிப்பிட்டதக்க இடத்தைப் பெறுவது சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சரவணபவன் கிளை. இந்த கிளை அதிகாலை 4 மணிக்கெல்லாம் காபி பிரியர்களுக்காகவே திறக்கப்படுகிறது. 

அதிகாலை 4 மணிக்கு காபி குடிப்பது என்பது வீட்டில் மட்டுமே சாத்தியம் என்று இருந்ததை இந்த மாநகரில் அதிகாலை நான்கு மணிக்கு காபி விற்பனை சாத்தியமாகி இருக்கிறது. கடற்கரை நோக்கி காலை நடைபயிற்சி செல்பவர்களும், அருகில் உள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்பவர்களும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சரவணபவன்கிளையில் காபி குடிக்க ஆஜர் ஆகிவிடுகின்றனர். 

20 ஆண்டுகளாக காபி மாஸ்டராக இருக்கும் ரவி

அதிகாலை தொடங்கி காலை 9 மணி வரை நூற்றுக்கணக்கான காபிகள் சுடசுட விற்பனையாகின்றன. காபியின் டிக்காசன், பால் இரண்டையும் சுவைபட கலந்து சர்க்கரை சேர்த்து பிரியமான காபியை, மன நிறைவுடன் கடந்த 20 ஆண்டுகளாக காபி மாஸ்டர் ரவி வழங்கி வருகிறார். 

Must Read:  கொரோனா காலத்தில் இந்தியர்கள் எந்த உணவுக்கு அதிகம் செலவிட்டார்கள் தெரியுமா?

இங்கு வரும் பிரபல நபரோ அல்லது சாதாரண நபரோ அவ்வளவு பேரின் விருப்பத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் ரவி. ஸ்டிராங்க், சர்க்கரை குறைவாக, சர்க்கரை அதிகமாக என்று ஒவ்வொருவரின் விருப்பத்தையும் சிரித்துக் கொண்டே நிறைவேற்றி காபி வடிவத்தில் கொடுப்பது ரவிக்கு கைவந்த கலை. சென்னைக்கு புதிதாக வருபவர்கள், சென்னையில் இருந்தும் இதுவரை இந்த காபி சுவையை அறியாதவர்கள் நாளை காலை 4 மணிக்கு சரவணபவனில் ரவியின் காபியை சுவையுங்கள். அப்படியே கடற்கரைக்கும் ஒரு நடை போய்வாருங்கள்.

புகைப்படம்; நன்றி; மயிலாப்பூர் டைம்ஸ்

#MorningCoffee  #BestCoffee #BestCoffeeInChennai


Comments


View More

Leave a Comments