இளைய தலைமுறைகளிடம் இயற்கை வழிகாட்டல்…
உணவு அரசியல் பற்றியும், உணவு நஞ்சாதல் பற்றியும் இளைஞர்களிடம் பேச வேண்டும் என்று என்னுடைய நண்பர் திரு. அரிஅரவேலன் அவர்களின் துணைவியாரும் ஏஐஆர்டி என்ற அமைப்பை நடத்தி வரும் திருமதி விஜி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவர் மதுரையில் உள்ள கல்லூரி மாணவியர்களோடு இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருபவர். நீண்ட நாட்கள் பெண்கள் மேம்பாடு குறித்து செயலாற்றி வருபவர்.
Must Read: ஏப்ரல் 10ம் தேதி கோவையில் இயற்கை வழி உழவர்களுக்கான நேரடி விற்பனை சந்தை
நல்ல வாய்ப்பாக கடந்த மார்ச் 20ஆம் நாள் அமைந்தது. மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 60 மாணவியர்களை பொதிகைச்சோலைக்கு திருமதி விஜி அவர்கள் அழைத்து வந்திருந்தார். பெரும்பாலும் இளங்கலை பயிலும் மாணாக்கர்கள், சில முதுகலை பயிலும் மாணவிகளும் இருந்தனர்.
கானுணவு, வேளாண் உணவு, தொழிற்சாலை உணவு என்ற மூன்று உணவுகள் பற்றி விரிவாகப் பேசினேன். நமது உணவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும், அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றியும் பேசினோம்.
நிறைய வினாக்களை மாணவிகள் எழுப்பினர். உரையாடல் நண்பகல் உணவுவரை நீண்டது. பின்னர் உணவு முடித்து பொதிகைச்சோலை என்ற கூட்டுப்பண்ணையின் செயல்பாடுகள் பற்றி பொதிகையின் உறுப்பினர் விளக்கிக் கூறி அவர்களை காய்கறித் தோட்டம், தாதெரு மன்றம்(compost yrad), தொய்யா துடவை(no tilling field), பழனம்(rice-fish culture), அணிநிழற்காடு (forest garden) போன்ற அமைப்புகளைச் சுற்றி காட்டினார்.
Must Read: கோடைகால சளித்தொல்லைகளில் இருந்து விடுபடுவது எப்படி?
Comments