ஏப்ரல் 10ம் தேதி கோவையில் இயற்கை வழி உழவர்களுக்கான நேரடி விற்பனை சந்தை


இயற்கை உணவு பொருட்கள் சந்தை 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்  

இயற்கை உணவு பொருட்கள் விலை விவரங்கள் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். 

Also Read: கோடைகால சளித்தொல்லைகளில் இருந்து விடுபடுவது எப்படி?

இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

இயற்கை வழி உழவர்களுக்கான நேரடி விற்பனை சந்தை

செஞ்சோலை நடத்தும்  இயற்கை வழி உழவர்களுக்கான நேரடி விற்பனை சந்தை ஏப்ரல்-10ம் தேதி ஞாயிறு அன்று 09.30 மணி முதல் மதியம்  01.30 வரை நடைபெற உள்ளது. சூலூர்.செஞ்சோலையை மையமாகக்கொண்டு இயற்கைவழி வேளாண்மை & வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் / நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன,   செஞ்சோலையின் செயல்பாடுகளில் முழுமையாக இணைத்துக் கொண்ட குடும்பங்கள் & தனிநபர்களை இணைத்து செஞ்சோலை தற்சார்பு சமூகம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. 

செஞ்சோலை இயற்கை விளைபொருள் சந்தை

நமக்குள் அறிவுபரிமாற்றம் , பொருள்பரிமாற்றம் , உற்பத்தி, விற்பனை என நமக்குள்ள தேவையை நமக்குள்ளேயே பூர்த்தி செய்யும் சமூகத்தினை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம். இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலில் ஈடுபாடுள்ளவர்களை  செஞ்சோலை தற்சார்பு சமூகக் கட்டமைப்பின் அடுத்த நகர்வாக இயற்கைவழி உழவர்களுக்கு நேரடி விற்பனை வாய்ப்பு ஏற்படுத்தவும்,  நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்களை சரியான விலையில்  கிடைக்கவும் நேரடி விற்பனை சந்தையினை, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று, சூலூர்.செஞ்சோலையில் நடைபெற உள்ளது. 

Also Read:தென்னிந்தியர்களின் சுவையை ஆக்கிரமித்திருக்கும் குழம்பு வகைகள்

அதன்படிதான் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் நிகழ்வு நடைபெற உள்ளது. சந்தையில்  காய்கறிகள் கீரைகள் & பழங்கள், நமது மரபான அரிசிவகைகள் சத்துமிகு சிறு தானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய் வகைகள் மரபு தின்பண்டங்கள் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் கைத்தறி ஆடைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்படும்.

மேலும் நிகழ்வில் (தேன்குழல்) கரும்பு சர்க்கரை ஜிலேபி செய்முறை குறித்து திரு ஆவூர்.முத்து பயிற்சி அளிக்க உள்ளார்.  இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலில் ஈடுபாடுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். செந்தில் குமரன் 9566665654, ஆவூர்.முத்து 9600873444 ஆகியோரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். 

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
 

Comments


View More

Leave a Comments