முந்திரியை பாலாக எடுத்து காப்பி போட்டு குடிக்கலாம் தெரியுமா?


காலை எழுந்ததும் முதல் வேளையாக 50g முந்திரி பருப்பை நீர் சேர்த்து 20  நிமிடம் நீரில் ஊற வைத்தேன். 20நிமிடங்கள் ஆனதும் மிக்சியை கழுவி முந்திரி பருப்பை 2முறை நீரில் அலசி விட்டேன், பிறகு நீர் சேர்க்காமல் அரைத்து விட்டேன்.

50g முந்திரி பருப்பில் 500ml பால் தயாரிக்கலாம் எனவே, 500ml நீரை நான்காக பிரித்து விட்டு ஒவ்வொன்றாக  சேர்த்து மிக்சியில் அரைத்து கொண்டே இருந்தேன். 

Must Read: காளானை இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?

மொத்த நீரையும் சேர்த்து அரைத்து முடித்து பார்த்தால் என்னவொறு ஆச்சர்யம், பாலே தோற்று விடும் வெண்மை மேலும் இதை பால் என்று சொல்வதை விட முந்திரி கிரீம் என சொல்லலாம். அப்படியொரு அடர்த்தி, பிறகெண்ண ஆச்சர்யம் அடங்காமல் double boiler முறையில் இந்த பாலை சுட வைத்தேன் 

பின்னர் அந்த முந்திரி பாலில் காஃபி தூள் சர்க்கரை சேர்த்து அந்த காஃபியை சுவைத்து முடித்தேன், ஆகாக ஆக அப்படியொரு மனம் சுவை, யாராலும் ஏனக்கு இந்த சுவை பிடிக்க வில்லை என கூற முடியாத அளவுக்கு சுவை, 

முந்திரியை பாலாக எடுத்து குடிப்பதால் எண்ணறற நன்மைகள் 

    1.முந்திரி பாலில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

     2.முந்திரி பாலில் ஒமேகா 6 உள்ளிட்ட அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான தோலுக்கு வழிவகை செய்கின்றன. அத்துடன் உடலில் உள்ள கொலஸ்ராலின் அளவினை கட்டுக்குள் வைக்கின்றன.

முந்திரிபாலில் உள்ள நன்மைகள்

     3.முந்திரி பாலில் காணப்படும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது, இரத்த அழுத்தம் சீரானால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

Must Read:கண்ணதாசன் மெஸ்சின் வெற்றியின் ரகசியம் சொல்லும் கவிஞரின் மகள் கலைச்செல்வி

     4.முந்திரி பாலானது இதய நலத்தினை மேம்படுத்துகிறது. முந்திரி பாலில் ஆலிவ் எண்ணெயில் உள்ளது போன்று ஒலியிக் அமிலம் காணப்படுகிறது,ஒலியிக் அமிலமானது இதய நோய்களுக்கு காரணமான டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முந்திரி பாலினை அளவோடு உண்டு இதய நலத்தை பேணலாம்

      5.முந்திரி பாலில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இதில் உள்ள கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.

      6.முந்திரி பாலானது விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் தயிரினைவிட எளிதில் செரிமானம் ஆகிறது. ஏனெனில் பாலில் உள்ளது போன்று லாக்டோஸ் மற்றும் கேசின் புரதம் இதில் காணப்படுவதில்லை. எனவே இது எளிதில் செரிமானம் ஆகும்.

    7.பித்தநீர்கட்டி ஏற்படுவதை முந்திரி பாலானது தடை செய்கிறது.

    8.முந்திரி பாலானது மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகச் செயல்படுகிறது. முந்திரி பாலில் உள்ள எல் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலமானது நமது உடலில் செரிடோனின் மற்றும் நியாசின் வேதிச் சேர்மமாகப் பிரிக்கப்படுகிறது. இவ்வேதிச் சேர்மங்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து மனஅமைதியை ஏற்படுத்துகின்றன

முந்திரி பாலின் குறைகள்

முந்திரி பால், பால் பொருட்களை விட கலோரிகளில் குறைவாக இருக்கலாம், ஆனால் இது குறைவான புரதத்தையும் உள்ளடக்கியது, கால்சியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கலாம்,

அனைவரும் முயற்ச்சி சொய்து  பலன்களை பெறுங்கள், மாட்டு பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இதை செய்து குடுத்தால் நிச்சயம் சுவை பிடிக்கும்,ஆரோக்கியமான பானத்தை குடிக்கின்றோம் என்ற மன நிம்மதியும் நமக்கு கிடைக்கும் பாக்கெட் பாலை விட இது எவ்வளவோ மேல்

-பிரபு, ஆண்டிமடம் 9578899664

#CashewMilk #CashewMilkWithCoffe  #CashewMilkBenefits

 


Comments


View More

Leave a Comments