ஆரோக்கியம் அளிக்கும் வேப்பம்பூ காரக்குழம்பு


ஆண்டுக்கு அரை கிலோ அளவுக்கேனும் ஒவ்வொரு வீட்டிலும் சமையலில் வேப்பம்பூ பயன்படுத்தி நம் குடும்பத்தைப் பல்வேறு நோய்களில் இருந்து காக்க இயலும். சில பயன்பாடுகள் இப்பதிவில் தொடர்கிறது வாயு கோளாறு, வயிறு உப்புசம், வயிறு மந்தம், வயிற்று வலி பிரச்சனைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேப்பம்பூ கஷாயம் சிறப்பாக பலன் தரும்.

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து நான்கு வேப்பம் பூக்களை போட்டு கொதிக்கவிட்டு அரை டம்ளர் ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி குடிக்கவும். தினமும் காலை மாலை என்று இரண்டு வேளையும் குடித்து வந்தால் வயிற்று கோளாறுகள் நீங்கும். சிறு பிள்ளைகளுக்கு இதை ஒரு வேளை மட்டும் கொடுக்க வலியோடு வயிறும் சுத்தம் ஆகும்

வேப்பம் பூவை கொண்டு ருசியான காரக்குழம்பு செய்யலாம்

பித்த வாந்தி பிரச்சனை இருப்பவர்களுக்கு இவை கை கண்ட மருந்து. பித்த வாந்தியால் அவதிப்படுபவர்கள் உணவு செரிமானமாகாமல் உணவு எதுகளிப்பு, புளியேப்ப பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் தினமும் சாப்பிடுவதற்கு முன்பு அரை மணிநேரம் முன்னதாகவே வேப்பம் பூ மூன்றை வெறும் வாயில் இட்டு உடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து மென்று சாறை விழுங்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் இரண்டு அல்லது மூன்று வேப்பம் பூக்கள் போதுமானது. மூன்று நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம் பூ-வின் மருத்துவ பயன்கள்

​மலக்குடல் சுத்தம்: கசப்பு தன்மை கொண்டிருக்கும் வேப்பம் பூ சற்று வெப்பம் மிகுந்ததும் கூட. இது உடலில் குடலில் இருக்கும் பூச்சிகளையும், மலக்குடலில் இருக்கும் பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டவை. 

Must Read: முருங்கை விதையின் மருத்துவ அற்புதங்களை தெரிந்து கொள்ளுங்கள்…

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் குழந்தைகள் உடலில் போதுமான சத்து சேராது. குறிப்பாக அதிகம் இனிப்பும் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி அதிகமாகவே இருக்கும். மாதம் இருமுறையாவது வேப்பம் பூக்களை அரைத்து தேனில் குழைத்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறுவதோடு வயிறு சுத்தமாகும். பெரியவர்கள் மாதம் ஒருமுறை வயிறு சுத்திகரிக்க வேப்பம்பூ பொடியை மோரில் கலந்து குடிக்கலாம்.

​​சரும நோயை சரிசெய்ய உதவும் 

சரும வியாதிக்கு உள்மருந்தாக வேப்பம் பூ பயன்படுத்தி கொள்ளலாம். சரும அரிப்பு, கை கால்களில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேப்பம் பூவை உள்ளுக்கு சேர்க்கலாம்.உணவில் வேப்பம் பூ சேர்த்துகொள்வதன் மூலம் நீரிழிவு, இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவும். கல்லீரலில் கொழுப்பு சேரமால் தடுக்கும்.

பல்வேறு உடல்நல பலன்களை தரும் வேப்பம்பூ காரக்குழம்பு

 

கசப்பு தன்மை கொண்டிருக்கும் வேப்பம் பூ சற்று வெப்பம் மிகுந்ததும் கூட. இது உடலில் குடலில் இருக்கும் பூச்சிகளையும், மலக்குடலில் இருக்கும் பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டவை. வயிற்றில் பூச்சிகள் இருந்தால் குழந்தைகள் உடலில் போதுமான சத்து சேராது. குறிப்பாக அதிகம் இனிப்பும் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி அதிகமாகவே இருக்கும். மாதம் இருமுறையாவது வேப்பம் பூக்களை அரைத்து தேனில் குழைத்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறுவதோடு வயிறு சுத்தமாகும்.

Must Read: இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா? வெளியன் சம்பா அரிசியில் செய்து பாருங்கள்!

சரும வியாதிக்கு உள்மருந்தாக வேப்பம் பூ பயன்படுத்தி கொள்ளலாம். சரும அரிப்பு, கை கால்களில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேப்பம் பூவை உள்ளுக்கு சேர்க்கலாம். உணவில் வேப்பம் பூ சேர்த்துகொள்வதன் மூலம் நீரிழிவு, இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவும். கல்லீரலில் கொழுப்பு சேரமால் தடுக்கும்.இன்னும் ஏராளமான தகவல்கள் இணையத்தில் உள்ளன.வாதம் பித்தம் கபம் இவற்றின் சமநிலை நல்ல உணவுகளால் மட்டுமே றமுடியும்.வாரம் ஒரு முறை சமைத்து உண்ணலாம்.ஆவாரம் பூ குழம்பு கூட இது போல் செய்யலாம்.

உலர்ந்த வேப்பம்பூ 100 கிராம் 100 ரூபாய்    வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ள : 9493943495, 8940925788 , 9489434551

செய்தி, படம்; நன்றி; சரோஜாகுமார் முகநூல் பதிவு  

#VepampooKarakulambu #BenefitsVepampoo  #SarojaKumar #BuyVepampoo 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments