முருங்கை விதையின் மருத்துவ அற்புதங்களை தெரிந்து கொள்ளுங்கள்…


 

முருங்கையோட மகிமை இப்போதான் நம்ம எல்லோருக்கும் தெரியவந்திருக்கு. முகநூல் நண்பரான சரோஜாகுமார் முருங்கையைப் பத்தி ரொம்பநாளா சொல்லிட்டு வாராங்க. சரோஜா அக்கான்னா நிறையபேருக்கு தெரியும். அவ்வளவு பிரபலமான இந்த சரோஜாகுமார் (மேடம்) எனக்கு அறிமுகமானதும் அவங்கக்கிட்ட முருங்கை எண்ணெய், முருங்கை புண்ணாக்கு இன்னும் சில பொருள்கள் வாங்கினேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மக்கள் டி.வி. நிகழ்ச்சிக்காக நான் நேர்ல போகும்போது முருங்கைக்கீரையில லட்டு செஞ்சி தந்தாங்க. அவங்கக்கிட்ட இருந்த முருங்கை விதை முத்து முத்தா இருந்திச்சி. முருங்கையில நிறைய உணவுப்பொருள் செஞ்சிட்டு வர்றாங்க சரோஜா மேடம். இதை மக்கள் மத்தியில கொண்டு சேர்க்கணும்கிற முயற்சியில தீவிரமா செயல்பட்டு வர்றாங்க. முருங்கை உணவுத் திருவிழாங்கிற பேர்ல ரொம்ப சிறப்பா செஞ்சிட்டு வர்றாங்க.

முருங்கை விவசாயி, சரோஜா குமார்

ஒருமுறை முருங்கை குறித்து பசுமை விகடன் இதழுக்கு சரோஜா குமார் அளித்த பேட்டியில், அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை அதிகம் விளையுது. ஆனால், தகுந்த விலையோ, சேமிப்பு வைக்க சேமிப்புக் கிடங்கோ இல்லை. இங்கு முருங்கை சார்ந்த தொழிற்சாலையும் இல்லை.

Must Read:சென்னையில் வரும் 27-ம் தேதி .மாடித்தோட்ட செயல்முறைபயிற்சி

அதனால், விவசாயிகளுக்கு இப்படி முருங்கை விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பது பயனுள்ளதா இருக்கும். இந்த எண்ணெய் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்குது. பொடுகு, சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளுக்கு முருங்கை எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

முருங்கை விதையின் அற்புத பலன்கள்

என்னோட தங்கை மகள் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்வு முடிந்த பின்னர், மேக்கப் சுத்தம் செய்ய எல்லோரும் தேங்காய் எண்ணெய் பூசிக் கழுவிக்கொண்டு இருந்தனர். அவர், முருங்கை எண்ணெயை முகத்தில் பூசி பஞ்சு வைத்து லேசாகத் துடைத்ததும் சுத்தமாகப் போய்விட்டது.

அவரின் தோழிகளும் ஆசிரியர்களும்கூட, ‘நீ மட்டும் எப்படி இப்படி விரைவில் சுத்தம் செய்தாய்?’ என்று வியப்புடன் கேட்டனர். அதேபோல்,சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், ‘முருங்கை எண்ணெய் பூச ஆரம்பித்த பின்னர் முகத்தில் மற்றும் கைகளில் இருந்த கரும்புள்ளிகள் மறைந்து வருவதாக’க் கூறினார். இப்படி முருங்கை எண்ணெய் பல பிரச்னைகளுக்குத் தீர்வா உள்ளது. முருங்கை விவசாயிகள் இப்படி எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்” என கூறியிருந்தார். 

சமீபத்துல நான் ஹரிநாத்ங்கிற விஞ்ஞானி ஒருத்தரை பார்க்கும்போது அவர் முருங்கை விதையில இருக்கிற சத்துகளை தெரிஞ்சி அவரோட அம்மாவுக்கு வந்த மூட்டுவலிக்கு பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கார். அதுல தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணி அதை மக்கள் மத்தியில கொண்டு சேர்க்கணும்கிற முயற்சியில இறங்கியிருக்காரு. 

நானும்கூட கொரோனா காலகட்டத்துல உடல்நலம் பாதிச்சவங்களை முருங்கைக்கீரை சூப் வச்சி குடிக்கச் சொன்னேன். அதோட மாதவரம் சித்த மருத்துவமனைல மருந்துப்பிரிவுல வேலை செஞ்சி ரிட்டயர்டான ஶ்ரீதர் சார் `முருங்கை விதைகளைச் சாப்பிட்டா நுரையீரல் பிரச்சினை, மூச்சுத்திணறல் சரியாகுது'ன்னு சொன்னதால அதை கொரோனா நோயாளிகளை சாப்பிடச் சொன்னேன். நல்ல ரிசல்ட். இந்த மாதிரி ரொம்ப சாதாரணமா கிடைக்கிற முருங்கைக்கீரை, முருங்கை விதைக்கு நிறைய மருத்துவக் குணம் இருக்கு.

Must Read: இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா? வெளியன் சம்பா அரிசியில் செய்து பாருங்கள்!

வெளிநாட்டுக்காரனெல்லாம் முருங்கையோட மகிமையை தெரிஞ்சி அதை சாப்பிட்டு வர்றான். கியூபாவோட முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ முருங்கையோட மகிமையை தெரிஞ்சி அதை நம்ம ஊர்ல இருந்து எடுத்துட்டு போய் அவர் சாப்பிட்டதோட அவரோட நாட்டு மக்களுக்கும், பக்கத்துல உள்ள ஹெய்த்தி தீவுல உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொடுத்தது உண்மையான வரலாறு. இந்த உண்மைகளை நாமளும் தெரிஞ்சிட்டு பயன்படுத்துவோம்.

பல நலன்களைக் கொண்ட முருங்கை எண்ணைய்

முருங்கை எண்ணைய் கிடைக்குமிடம்; 

இயற்கை விவசாயியும் கரூர் மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைப்பவருமான சரோஜா குமார் முயற்சியில் உருவாகியுள்ள கரூர் முருங்கை மற்றும் காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்.நிறுவனத்தில் முருங்கை எண்ணைய் குறித்த தகவல்கள் கிடைக்கும். அந்த நிறுவனத்தை https://www.facebook.com/KMVFPCL/?ref=page_internal

என்ற முகநூலிலும், 89408 82992, 09493943495 ஆகிய மொபைல் எண்களில் காலை 10மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டும் தொடர்பு கொண்டு அறியலாம்.

-எம்.மரியபெல்சின் 

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#MurungaiBenefits  #MoringaBenefitsForHair  #MurungaiForHealthy #MurungaiFormerSarojaKumar  #SarojaKumar


Comments


View More

Leave a Comments