உணவு ஒரு புனிதமான பிரசாதம்


அனைத்து வகையான தொண்டுகளிலும், அன்னதானம் ஒரு உயர்ந்த நல்லொழுக்கமாக கருதப்படுகிறது. நாட்டில் ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான பேர் பட்டினி கிடக்கிறார்கள், மேலும் பலரால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைக் கூட உண்ணமுடியாத நிலை உள்ளது.  

இந்த சூழலில் டேப்லெட் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இப்போது சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் உள்ள சாமியார் மடம் பகுதியில் மூன்றாவது அன்னதான கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் உள்ள துன்சேரி நிறுவனத்தின் இயக்குநர் மிருகங்க் தனுகா முன்னிலையில் இந்த அன்னதான கூடம் திறக்கப்பட்டது. 

Also Read: பரோட்டாவின் சுவையை உணரும் நாம் மைதாவின் தீமைகளையும் தெரிந்து கொள்வோம்

ஒவ்வொரு மாதமும் 8500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்க அன்னதானக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே இந்த அமைப்பின் சார்பில் தண்டையார் பேட்டை, மகாகவி பாரதியார் நகர் ஆகிய இடங்களில் இரண்டு அன்னதான கூடங்கள் செயல்படுகின்றன.ஏற்கனவே இரண்டு மையங்கள்  மூலம் சென்னையில் மாதம் தோறும் 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 

டேப்லெட் இந்தியா பவுண்டேஷனின் உன்னத பணி

சமீபத்தில் விருந்தோம்பலை அனுபவித்த ஒருவர் டேப்லெட் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி ஒருவருக்கு  நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மையத்தில் வழங்கப்படும் உணவின் தரம், அளவு மற்றும் சுவை ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன். அங்கு சாப்பிட வரும் அனைவருக்கும் வழங்கப்படும் மரியாதையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 

Also Read: கம்பத்தில் பசியோடு இருப்போருக்கு அன்னமிடும் கைகள்…

குறிப்பாக எல்லோரையும் கூப்பிய கையோடு வரவேற்றது மட்டுமின்றி, அனைவரின் தேவைகளையும் கேட்டு, அன்புடன் பரிமாறப்படுகிறது,” என்று கூறியுள்ளார். கொரோனா தொற்று பேரிடரின் போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

#FreeFoods #FoodForNeedy #FoodsForPoor 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments