வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வழியும் எண்ணையை எப்படி அகற்றுவது தெரியுமா?
உணவோடு எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது எப்போதும் சாத்தியமில்லை, அதனால் பல தீங்குகள் நமக்கு ஏற்படுகின்றன. சமைத்த உணவில் இருந்து கூடுதல் எண்ணெயை அகற்றுவது சாத்தியமானதுதான்.
இந்திய உணவு வகைகள் அதன் காரமான உயர்ந்த தரத்துக்கு உலகப் புகழ்பெற்றவை. பெரும்பாலான உணவுகள் எண்ணெயில் தயாரிக்கப்படுகின்றன. சில உணவுப் பொருட்களில் எண்ணையின் அளவு அதிகமாகவே இருக்கும்.
Must Read:உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் 5 காய்கறிகள் என்ன தெரியுமா?
எண்ணையுடன் கூடிய அபாரமான இந்திய உணவுகளின் ருசியை நாம் எப்போதும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் இப்போது நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் படிப்படியாக ஆரோக்கியமான அம்சங்களை நோக்கி மாறி வருகின்றன.
நம் உணவில் அதிக அளவு எண்ணெய் இருப்பதை காணும்போது, அந்த உணவை சாப்பிட்டால் நமது உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்து விடுகின்றோம். சமைக்கும் போது அதிக எண்ணெய் உபயோகிக்கின்றோம். எண்ணையில் வறுத்த சிற்றுண்டியை விரும்பி உண்கின்றோம்.
எண்ணெய் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வது பெரும்பாலும் நல்லதல்ல. உணவுப்பொருட்களில் உள்ள கூடுதல் எண்ணெயை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. சமைத்த உணவில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.
எண்ணையை உறிஞ்சும் காகிதங்களை பயன்படுத்துங்கள்:
எண்ணையை உறிஞ்சும் காகிதங்களை லர் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான தேநீர் கடைகளில் வடையை ஒரு செய்தித்தாளில் வாங்கி, அந்த செய்தி தாளில் வடையை வைத்து அமுக்கி எண்ணையை எடுத்து விட்டு, அதன் பிறகு வடையை சாப்பிடுவது நமது பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், செய்தி தாளில் அமுக்கி சாப்பிடுவதற்கு பதிலாக நமது கைகளை துடைக்க உணவகங்களில் தரப்படும் நாப்கின்போன்ற வெள்ளை காகித் தைத்தில் வடை அல்லது எண்ணையி் வறுத்த உணவுப் பொருட்களை அமுக்கி, எண்ணையை அகற்றலாம்
வீடுகளில் உணவை எண்ணைய் ஊற்றி வறுத்த பிறகு அதனை எடுத்து எண்ணைய் உறிஞ்சும் காகிதத்தில் வைக்கலாம். உணவில் இன்னும் ஊடுருவாத மற்றும் மேற்பரப்பில் இருக்கும் எண்ணெயை அந்த காகிதம் உறிஞ்சி விடுகிறது.
Must Read:சென்னையில் அக்டோபர் 2ம் தேதி உணவே மருந்து மருந்தே உணவு பயிற்சி முகாம்
ரெஸ்டாரெண்டில் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து உண்ணும்போது எண்ணைய் நிறைந்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனை ஒரு கரண்டியை வைத்து அழுத்தவும், இதனால் எண்ணெய் பிழியப்பட்டு விடும்.
எண்ணையை அகற்ற ஐஸ் கியூப் முறை
ஐஸ்கட்டியை எண்ணைய் நிறைய உள்ள கிரேவியில் போட்டால், அந்த கிரேவியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உடனடியாக ஐஸ்கட்டியின் அடியில் சேர்ந்து விடும். ஐஸ்கட்டியை எடுத்து போட்டு விட்டு , எண்ணைய் இல்லாத கிரேவியை உணவில் ஊற்றி சாப்பிடலாம்.

Comments
View More