நில வேம்பு கசாயமும் பெரியார் பகுத்தறிவும்
நில வேம்பு ,வேம்பமரத்து பட்டை, புளியமரத்து பட்டை,(அல்லது இலையில் உள்ள காய்ந்த குச்சிகள் காம்பு) சித்தரத்தை, ஏலம், திப்பிளி, சுக்கு இவைகளை தலா 10 கிராம் அளவு இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக வற்ற காய்ச்சி அதை குடித்தால் கட்டாயம் காய்ச்சல் நிற்கும். இந்த மருந்து சாதாரண காய்ச்சலுக்கு மட்டுமே. இதை பலருக்கும் நான் கொடுத்துள்ளேன். காய்ச்சலுக்காக நானும் குடித்து குணமாகி உள்ளேன்.
குளிர் காய்ச்சல், இருமலுடன் காய்ச்சல், வாந்தி பேதியுடன் காய்ச்சலுக்கு குளிகை அல்லது பற்ப செந்தூரமே மருந்து. நோய்களுக்கு இறுதியான மருந்து செந்தூரமே (பஸ்பம்). செந்தூரம் தயாரிக்க பயன்படும் மருந்துகள் அனைத்தும் இன்று வெடி மருந்தாக பாயன்படுத்தப்படுகிறது (கெந்தகம், தாளகம், துத்தம், பச்சநாவி, துருசு, குங்கிலியம் இன்னும் பல..).
Must Read: மரபியலும், அறவியலும், அறிவியலும் சேர்ந்த பயிற்சி நிறைவு
நாயக்கர் ஆட்சியில் படையில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்ட போது தமிழ் குலங்களில் (சாதி) இருந்த பண்டுவர்கள் மூலம் செந்தூரம் மருந்துகளை வெடிக்காக தமிழ் குலங்கள் பயன்படுத்தியதால் பண்டுவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்(அரண்மனை பண்டுவர்களை தவிர). தடை செய்யப்பட்டார்கள். மருந்துகளும் அப்போதே தடை செய்யப்பட்டது.
இவர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்களும் (இந்த வெடி மருந்து) இதே தடையை தொடர்ந்தார்கள் என்பதே வரலாறு. இன்று வெடியாக பார்க்கப்படும் கெந்தகம் செந்தூரம் மருந்து என தெரியுமா. கெந்தகம் செந்தூரமே அனைத்து நோவுக்கான மருந்து என்பதை மக்கள் அறிய காலம் பிடிக்கலாம்.
தற்போது இந்தியாவில் கற்றுத்தரப்படும் பண்டுவம் (சித்த மருத்துவம்), ஆயுர் வேதம் மருத்து படிப்பில் செந்தூர தயாரிக்க சொல்லி தருவதில்லை. அவர்கள் ஏட்டளவிலே செந்தூரத்தை படித்துள்ளார்கள். அவர்களுக்கு இலையில் தயாரிக்கபடும் கசாயம், லேகியம் மட்டுமே பண்டுவம். (குறிப்பு ;ஆயுர் வேத பண்டுவத்திற்கு மூல நூல் இல்லை தமிழர்களிடமிருந்து திருடி அதை கடவுளை கருப்பொருளாக்கி ஆயுர் வேத வைத்தியம் என சொல்லுகிறார்கள்)
பண்டுவத்தில் அறுவை சிகிச்சை இல்லை (சிறிய அளவு தவிர). அறுவை சிகிச்சை இருப்பதாக திரைப்படங்களில் காட்டியதால் மக்களின் பண்டுவம் தொடர்பான அறிவு திசை திரும்பி விட்டது. நாயக்கர் ஆட்சியில் பண்டுவத்துடன் மாய வித்தைகள், மந்திரங்கள் நுழைத்தனர். இதனால் பண்டுவம் கிண்டல் செய்திடும் சொல்லாக மாறிவிட்டது.
பெரியார் பண்டுவத்தை எதிர்த்தார் என்பதாற்காக பெரியாரிய சிந்தனையாளர்கள் பண்டுவத்தை எதிர்ப்பது பகுத்தறிவில்லாத சிந்தனையாகவே பார்க்கப்படும். நாயக்கர் ஆட்சியில் தொடர்ந்து பிரிட்டீஷ்காரன் தனது அலோபதியை வியாபாரம் செய்திட மக்களை தொடர்ந்து நம்ப வைத்ததால் பண்டுவம் பொய்யாகி அன்னியமாகி விடாது.
இருப்பினும் அலோபதியில் அறுவை சிகிச்சை உடல் உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற உயரிய நுட்பங்களை நான் மறுத்திடவில்லை. ஆனால் பண்டுவத்தை குறைத்து மதிப்பிட்தன் விளைவே இன்றைய நோயாளிகளின் எண்ணிக்கை அதிக்கரித்தற்கான காரணம் என்பதை மறுத்திட முடியாது
Must Read: வெங்காயத்தின் நன்மைகள்; ஜலதோஷம் முதல் முடி உதிர்வதை தடுப்பது வரை பலன் தரும்
(கிழக்கு இந்தியன் கம்பெனி, பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தின் சிறைகள் மிகத்தாமதமாகவே உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னிருந்த மன்னர் ஆட்சி காலத்திலும், பகுதறிவு ? பிரிட்ஷே ஆட்சியிலும் இருந்த சிறைகள் அனைத்தும் அதிகாரத்திலிருந்தவர்களை அப்புறப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை. அரச மரபில் தண்டணை என்பது ஊனப்படுத்துதல் அடுத்து சிரசேதம் மட்டுமே.
இப்படி இருந்த காலத்தில் நம்பிக்கைகளை விதைப்பது அதை கடைபிடிக்காத மக்களுக்கு என்ன தண்டணை கொடுத்திருப்பார்கள் என்பதை உணரமறுப்பதன் விளைவு தான் சபரிமலை, வெள்ளியங்கிரி,.... சமற்கிருந்தம் மட்டுமே வழிப்பாட்டு மொழி.... என்பவை ஆண்டாண்டு காலமாக இருந்தவை எனப்பிதற்றுவது பொய்யன்றி வேறன்ன. இப்படித்தான் எமது தமிழ் மொழியின் அறிவான மருத்துவம் சிதைந்தது)
#PanduvamMethod #TraditionalPanduvam #SiddhaMaruthuvam

Comments
View More