
தயிரை கொண்டு எத்தனை வகையான சமையல் செய்யலாம் தெரியுமா?
தயிர் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க கூடிய ஒரு உணவு. ஆயுர்வேதத்தின் படி, தயிர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, தயிர் சாதம் முதல் மோர் குழம்பு வரை சில அருமையான, எளிதான மற்றும் சுவாரஸ்யமான தயிர் ரெசிபிகளை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
தயிர் சாதம்
ஒரு பாத்திரத்தில் ¼ கப் சமைத்த அரிசி, 1 கப் தயிர், உப்பு, மிளகு, ½ நறுக்கிய அரை வெங்காயம், நறுக்கிய தக்காளி,பாதி நறுக்கிய வெள்ளரி, மற்றும் 2 டீஸ்பூன் ஊறவைத்த முளைகட்டிய பயறு சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து ஓரமாக வைக்கவும்.
1 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு, 8-10 கறிவேப்பிலை, மற்றும் 2 உலர்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை தயார் செய்யவும். பின்னர் தயிர் சாதத்தை தாளித்து பரிமாறலாம்.
இதையும் படியுங்கள்; இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
1 கப் அவலை ஊற வைத்து இரண்டு முறை கழுவ வேண்டும். தயிர் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை அல்லது வெல்லத் தூள் மேலே வைத்து பரிமாறவும். இந்த ஆரோக்கியமான காலை உணவு பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேச பிராந்தியத்தின் பிரதானமான உணவாகும்.
ஓட்ஸ் தயிர் உணவு
½ கப் ஓட்ஸ் உடன் 1 கப் தயிர் சேர்த்து இரவில் ஊற வைக்கவும். அடுத்த நாள் காலை, ஒரு ஜாடியில் போட்டு, அதற்கும் மேலே ஆளி விதைகள், சியா விதைகள், பருவகால பழங்கள் மற்றும் பழ ஜாம் ஆகியவற்றை அடுக்கடுக்காக சேர்க்கலாம். பின்னர் ஜாடியை மூடி, காலை உணவாக எடுத்துச் சென்று அலுவலகத்தில் சாப்பிடலாம்.
வெள்ளரி ரைத்தா
2 நடுத்தர அளவிலான வெள்ளரி காய்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் 1 டீஸ்பூன் நெய்யுடன் ஒரு நீண்ட கைபிடி கொண்ட பாத்திரத்தில் வதக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் தயிரை அடித்து, ருசிக்க 1 தேக்கரண்டி சர்க்கரை, உப்பு, மிளகு, ½ தேக்கரண்டி சீரக தூள், ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். வதக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ரைத்தாவை பிரியாணி, புரோட்டா ஆகியவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர், 1 கப் மாம்பழ கூழ், 1 தேக்கரண்டி தேன் மற்றும் 4-6 ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலவையாகும் வரை கலக்கவும். ஒரு கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
மோர் குழம்பு
ஒரு பாத்திரத்தில் 1 கப் புளிப்பு தயிரை எடுத்து அதில் 3 டீஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும். அதை நன்றாகக் கலந்து ஓரமாக வைத்துக் கொள்ளவும். இப்போது, கேஸ் ஸ்டவை நடுத்தர அளவு எரியவிட்டு, பாத்திரத்தை வைக்கவும், 1 டீஸ்பூன் எண்ணெய், 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடுகு, 8-10 கறிவேப்பிலை, 2 உலர்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து தயிர் மற்றும் கடலை மாவு கலவையை தாளிக்கவும். பின்னர் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், சுவைக்கு உப்பு, ¼ தேக்கரண்டி வெந்தையம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் 15-20 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். அருமையான மோர் குழம்பு தயார். அரிசி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
பா.கனீஸ்வரி
#CurdRecipes #CurdRice #MangoLassi
Comments